சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மேலும் 1.6 கோடி கொவிட் தடுப்பூசிகள் வழங்கத் திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 14 SEP 2021 9:14AM by PIB Chennai

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு, செப்டம்பர் 14-ஆம் தேதி வரை, 72.77 கோடிக்கும் அதிகமான (72,77,98,325) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் 1.6 கோடி டோஸ் தடுப்பூசிகளை (1,60,75,000) வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் 4.49 கோடி (4,49,03,025) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754668

 


(வெளியீட்டு அடையாள எண்: 1754835) வருகையாளர் எண்ணிக்கை : 254
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Malayalam