சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

7.62*39 மிமீ திருச்சி அசால்ட் ரைபிள் (TAR) – கீழ் மடிப்பு பட் வெர்ஷன்

Posted On: 26 AUG 2021 12:51PM by PIB Chennai

75 வது சுதந்திர தின நினைவாக, படைக்கல தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி, 25 ஆகஸ்ட் 2021 அன்று 7.62*39 மிமீ திருச்சி அசால்ட் ரைபிள்-ன் கீழ் மடிப்பு பட் (TAR –Down Folding Butt) பதிப்பை அறிமுகப்படுத்தியதுதற்போது, திருச்சிராப்பள்ளியில் உள்ள படைக்கல தொழிற்சாலை நிலையான பட் (Fixed Butt) மற்றும் பக்க மடிப்பு பட் (Side Folding Butt) ஆகிய இரண்டு வகைகளில் திருச்சி அசால்ட் ரைபிள் (TAR) தயாரித்து வருகிறது.

7.62*39 மிமீ திருச்சி அசால்ட் ரைபிள் (TAR) ஒரு சக்திவாய்ந்த தனிப்பட்ட தானியங்கி ஆயுதம் ஆகும், அது ஒற்றை மற்றும் தானியங்கி துப்பாக்கி சூடு முறையில் எதிரிகளை அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளதுஇது சாதாரண முறையில் ஒற்றை ஷாட் ரைபிள் ஆகும், மேலும் இதனை பர்ஸ்ட் மோடிலும் பயன்படுத்தப்படலாம்குறுகிய தொடர் முறையில் பயன்படுத்துவதன் மூலம் 500 மீ வரையில் உள்ள குழு அல்லது ஒற்றை இலக்குகளை அழிக்க முடியும்இருப்பினும். TAR இன் அழிவு விளைவு 1350 மீ வரம்பில் உள்ளது.

சில சிஏபிஎஃப் பிரிவுகள், மாநில காவல்துறை மற்றும் ஆர்பிஎஃப் காவலர் மற்றும் ரோந்து பணியில் உள்ள வீரர்களின் விரைவான மற்றும் எளிமையான இயக்கத்திற்கு டவுன் மடிப்பு பதிப்பு (Down Folding Butt) தேவைப்படுவதால் படைக்கல தொழிற்சலை திருச்சிராப்பள்ளி TAR கீழ் மடிப்பு பட் (Down Folding Butt) பதிப்பை தயாரித்துள்ளது.

TAR – கீழ் மடிப்பு பட்டின் (Down Folding Butt) ஒட்டுமொத்த நீளம் திறந்த (Open Butt) நிலையில் 900மிமீ மற்றும் பட் மடிப்பு (Folding Butt) நிலையில் 650 மிமீ ஆகும்.

7.62*39 மிமீ திருச்சி அசால்ட் ரைபிள்-ன் கீழ் மடிப்பு பட் பதிப்பு, படைக்கல தொழிற்சாலை திருச்சிராப்பள்ளியின் பொது மேலாளர், திரு சஞ்சய் திவேதி IOFS அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதுதிரு ராஜிவ் ஜெயின், IOFS, கூடுதல் பொது மேலாளர், திரு .கே.சிங், IOFS, கூடுதல் பொது மேலாளர் திரு வி. குணசேகரன், IOFS, இணை பொது மேலாளர், திரு S. கிருஷ்ணசாமி, IOFS, இணை பொது மேலாளர் மற்றும் OFT இன் பிற அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.


(Release ID: 1749173)
Read this release in: English