சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
கரிப் கல்யாண் அன்ன யோஜனா வெற்றிகரமாக அமல்படுத்துவதை தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் பூர்த்தி செய்கிறது
Posted On:
13 AUG 2021 2:39PM by PIB Chennai
கொவிட் 19 பெருந்தொற்று, ஊரடங்குக்கு வழிவகுத்து, சமூகத்தில் பல பிரிவினருக்கு பலவித சிக்கல்களை ஏற்படுத்தியது. பெருந்தொற்று நேரத்தில், கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்வது, மத்திய அரசின் முக்கிய அக்கறையாக மாறியது. தற்சார்பு இந்தியாவுக்கு பிரதமர் விடுத்த அழைப்பு, விவசாயிகளால் நிறைவேற்றப்பட்டது. அவர்களின் அதிகளவிலான அறுவடை, உணவு தானியங்களை போதிய அளவுக்கு இருப்பு வைக்க வழிவகுத்தது. இது உண்மையிலேயே பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனாவை வெற்றிகரமாக அமல்படுத்த உதவியது. ரேசன் அட்டை தாரர்களுக்கு இலவசமாக அரிசி அல்லது கோதுமை போன்ற உணவு தானியங்கள் அளிப்பதை உறுதி செய்தது. இதனால் ஊரடங்கு காலத்தில் யாரும் பட்டினியுடன் இருக்கமாட்டார்கள். தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், அரிசி, கோதுமை மற்றும் பருப்பு உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
2021-22ம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய வேளாண் அமைச்சகம் ரூ. 527 கோடியை அனுமதித்தது. இவற்றில் ரூ.7.51 கோடி, தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் அரிசிக்கும், ரூ.27.65 கோடி பருப்புக்கும், ரூ.2.49 கோடி கம்பு, சோளம் போன்ற உணவு தானியங்களுக்கும், ரூ.12 கோடி ஊட்டச்சத்து தானியங்களுக்கும், ரூ.3 கோடி பருப்புகளுக்கும் ஒதுக்கப்படுகிறது.
இந்தாண்டு, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஊட்டசத்து தானியங்கள் மற்றும் பருப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மணச்சநல்லூர் உதவி வேளாண் அதிகாரி திரு பார்த்திபன் கூறுகையில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மணச்சநல்லூர் பகுதி விவசாயிகளுக்கு துவரம் பருப்பு விதைகள் அளிக்கப்பட்டுள்ளன என்றார். இத்திட்டம் மத்திய அரசின் 100 சதவீத மானியத்துடன் அமல்படுத்தப்படுகிறது. தற்போது துவரை 100 ஹெக்டேர் நிலத்தில் பயிரடப்பட்டுள்ளது. இது 600 ஹெக்டேருக்கு விரிவுபடுத்தப்படும். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 60 ஹெக்டேர் நிலம் பரிசோதனை களமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு கோ 8 ரக விதைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒரு பரிசோதனை களத்தில் ஒரு ஹெக்டேர் நிலம் இருக்கும். மேலும், விவசாயிகள் விதைகளை பாக்கெட்டில் சேமித்து வைத்திருக்க முடியும். மழை பெய்யும்போது அதை விளைவிக்கலாம்.
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், உட்டச்சத்து தானிய விதைகள் விவசாயிகளுக்கு அடுத்த வாரம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் உளுந்து பயிரிடப்படும். இவைகள் ஜனவரி இறுதியில் அறுவடை செய்யப்படும். ஊட்டச்சத்து தானியங்கள் பரிசோதனை, 100 ஹெக்டேர் நிலத்தில் மேற்கொள்ளப்படும். பின்னர் மணச்சநல்லூர் பகுதியில், இது 3500 ஹெக்டேர் நிலங்களுக்கு விரிவுபடுத்தப்படும். 3 மாதங்களுக்குப்பின் இவை அறுவடை செய்யப்படும். தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், ஊட்டச்சத்து தானிய திட்டத்தின் கீழ் சோளம் 3500 ஹெக்டேர் நிலத்திலும், கம்பு 300 ஹெக்டேர் நிலத்திலும், மக்காச்சோளம் 700 ஹெக்டேர் நிலத்திலும் விளைவிக்கப்படும்.
தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பருப்புகள் மானிய திட்டத்தின் கீழ், ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள நிலத்தை உழும் ரோட்டாவேட்டர் இயந்திரம் வாங்க ரூ.34,000 மானியம் அளிக்கப்படும் எனவும், இதற்கான பயனாளி, சொந்த நிலம் மற்றும் டிராக்டர் வைத்திருக்கும் விவசாயியாக இருக்க வேண்டும் என வேளாண் அதிகாரி கூறினார்.
திருச்சிராப்பள்ளி மணச்சநல்லூர் பகுதி பூணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி திரு ஜெகதீஷ் கூறுகையில், ‘‘தாம் சோளம், கால்நடை தீவனம், நிலக்கடலை மற்றும் துவரை விளைவிக்கிறேன் என்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, வேளாண் அதிகாரிகளிடம் இருந்து சிறப்பான ஆலோசனையும் பெற்று வருகிறேன்’’ என்றும் கூறினார். துவரையை அவர் உள்ளூர் சந்தையில் விற்கிறார் மற்றும் தனது வீட்டிலும் பயன்படுத்துகிறார்.
இது உண்மையிலேயே அவரது குடும்பத்துக்கு உட்டச்சத்து உணவை உறுதி செய்கிறது. அக்டோபர் சம்பா நெல் விதைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய, உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பதை, தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. இத்திட்டம், பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனாவை வெற்றிகரமாக அமல்படுத்த அரசுக்கு உதவியது. இதன் மூலம் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் ஏழை பயனாளிகளுக்கு ரேசன் கடைகள் மூலம் இலவசமாக கோதுமை, அரிசி, பருப்புகள் வழங்கப்படுகின்றன.
விவசாயிகள் தங்கள் நிலத்தை பல்வேறு பயிர்கள் விளைவிப்பதற்கு பயன்படுத்த தேவையான ஆலோசனைகளை வேளாண் அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.
*************
பொன்னம்பாளையம் விவசாயி திரு ஜெகதீசுடன், வேளாண் அதிகாரிகள் திரு பார்த்தீபன், திரு பாஸ்கரன்.
(Release ID: 1745430)
Visitor Counter : 136