கலாசாரத்துறை அமைச்சகம்
சர்வதேசச் சுற்றுலா மையமாக தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் உருவாக்கப்படவுள்ளது: அமைச்சர் திரு கிஷன் ரெட்டி
प्रविष्टि तिथि:
10 AUG 2021 7:23PM by PIB Chennai
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய கலாச்சார அமைச்சர் திரு கிஷன் ரெட்டி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
குஜராத்தில் உள்ள லோதலில் அமைக்கப்படும் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம், இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டு சர்வதேசச் சுற்றுலா தலமாக திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம், பாரம்பரிய தீம் பூங்கா, கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம், அழகுப்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் பொழுதுபோக்குப் பகுதிகள், ஒவ்வொரு கடல்சார் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு தனித்தனிப் பகுதிகள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும், டிஜிட்டல் சுற்றுலா அனுபவத்தை வழங்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட/மெய்நிகர் உண்மை காட்சிகள், ஒலி மற்றும் ஒளி காட்சிகள், தொடுதிரை மையங்கள், கடல்சார் வரலாறு குறித்த குறும்படங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744554
------
(रिलीज़ आईडी: 1744597)
आगंतुक पटल : 266