சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கொவிட் சிகிச்சை பெற்றவர்களின் விபரம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 AUG 2021 2:20PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் இலவச கொவிட்-19 பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்குவதற்கான ஆதரவை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய சுகாதார ஆணையம் வழங்கி வருகிறது.

2020-21 நிதியாண்டில், கொவிட்-19 சிகிச்சைக்காக மொத்தம் 3,27,672 மருத்துவமனை சேர்க்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டை பொருத்தவரை 7,90,272 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை பெருக்கத்தை நிலைப்படுத்துவதற்காக பரிவார் விகாஸ் இயக்கம், விரிவுபடுத்தப்பட்ட குடும்பக்கட்டுப்பாடு விருப்பத்தேர்வுகள், தொகுப்பு மற்றும் உபகரணம், குடும்பக்கட்டுப்பாடு குறித்த ஊடக பிரச்சாரம், உலக மக்கள்தொகை தின நிகழ்ச்சிகள், ஆண்கள் குடும்பக்கட்டுப்பாடு நடவடிக்கைகள், குடும்பக்கட்டுப்பாடு உபகரணங்களை வீட்டிற்கே கொண்டு சென்று வழங்குதல், குடும்பக்கட்டுப்பாடு மேலாண்மை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

2020 ஜூலையில் வெளியான இந்திய தலைமை பதிவாளரின் தலைமையிலான மக்கள்தொகை மதிப்பீடுகளுக்கான தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையின் படி, இந்தியாவில் 2016-க்கான உத்தேச மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 12,91,074 ஆகவும், 2016-17-ல் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தின் மாற்றம் 1.11 ஆகவும் இருந்தது.

2017-க்கான உத்தேச மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 13,05,463 ஆகவும், 2017-18-ல் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தின் மாற்றம் 1.10 ஆகவும் இருந்தது. 

2018-க்கான உத்தேச மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 13,19,844 ஆகவும், 2018-19-ல் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தின் மாற்றம் 1.09 ஆகவும் இருந்தது.

2019-க்கான உத்தேச மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 13,34,235 ஆகவும், 2019-20-ல் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தின் மாற்றம் 1.08 ஆகவும் இருந்தது. 2020-க்கான உத்தேச மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 13,48,616 ஆக இருந்தது.

தமிழகத்தில் 2016-க்கான உத்தேச மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 74,635 ஆகவும், 2016-17-ல் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தின் மாற்றம் 0.47 ஆகவும் இருந்தது.

2017-க்கான உத்தேச மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 74,989 ஆகவும், 2017-18-ல் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தின் மாற்றம் 0.47 ஆகவும் இருந்தது. 

2018-க்கான உத்தேச மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 75,342 ஆகவும், 2018-19-ல் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தின் மாற்றம் 0.47 ஆகவும் இருந்தது.

2019-க்கான உத்தேச மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 75,695 ஆகவும், 2019-20-ல் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தின் மாற்றம் 0.47 ஆகவும் இருந்தது. 2020-க்கான உத்தேச மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 76,049 ஆக இருந்தது.

பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள் மாநில அரசுகளின் பொறுப்பில் இருக்கும் போதிலும், பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகம் வழங்கி வருகிறது.

பொது சுகாதார வசதிகளை நிறுவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகள் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. நடமாடும் மருத்துவ மையங்கள் மற்றும் தொலை மருத்துவ சேவைகளும் வழங்கப்படுகின்றன.

ஆயுஷ்மான் பாரத்தின் ஒரு பகுதியாக, 2020 டிசம்பருக்குள் நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் துணை சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களை சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அரசு ஆதரவளித்து வருகிறது.

மத்திய அரசு பணியாளர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் தகுதியுடைய அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான அடிப்படை சுகாதார சேவைகளை வழங்குவதற்கான திட்டமாக மத்திய அரசு சுகாதார திட்டம் செயல்படுகிறது.

கொவிட்-19-ஐ கட்டுப்படுத்துவதற்கான விமான நிலையங்களில் பரிசோதனை நடத்துவதற்காக மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை மத்திய அரசு சுகாதார திட்டம் அனுப்பியது. மத்திய அரசு சுகாதார திட்ட பயனாளிகளை பரிசோதிப்பதற்காக காய்ச்சல் மருந்தகங்களை மத்திய அரசு சுகாதார திட்டம் செயல்படுத்தியது.

பயனாளிகளுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனை மற்றும் அறிவுரையை மத்திய அரசு சுகாதார திட்ட மருத்துவ அலுவலர்கள் வழங்கினர். மத்திய அரசு சுகாதார திட்ட சுகாதார மையங்கள் கொவிட் தடுப்பு மருந்து வழங்கல் மையங்களாக செயல்பட்டன.

கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்த தேவையான ஆதரவை மாநிலங்களுக்கு இந்திய அரசு வழங்கியது.

நாடு முழுவதும் மூன்றடுக்கு கொவிட்-19 மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன, ராணுவம், ரயில்வே மற்றும் இதர துறைகளின் மருத்துவமனைகள் கொவிட் சிகிச்சைகளை வழங்கிய நிலையில், தற்காலிக மையங்கள் நாடு முழுவதும் டிஆர்டிஓ-வால் நிறுவப்பட்டன.

திரவ மருத்துவ ஆக்சிஜனின் விநியோகம் 2021 பிப்ரவரியில் ஒரு நாளைக்கு 1292 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், 2021 ஏப்ரலில் 8593 மெட்ரிக் டன்னாக இது அதிகரித்தது. 2021 மே 28 அன்று, 10,250 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. 

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சைகளுக்காக ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு ரூ 5 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது. 13.44 கோடி குடும்பங்கள் இதன் பயனாளிகளாக உள்ளனர்.

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் தகுதியுடைய பயனாளிகளில் 48.56 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். கர்ப்பிணி பெண்களுக்காக ஜனனி சிசு சுரக்‌ஷா திட்டம், ஜனனி சுரக்‌ஷா திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகின்றன.

 

ஐசிஎம்ஆர்-ஆல் 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றின் படி, 1990-ம் ஆண்டு 100000 பேரில் 3468 பேருக்கு இருந்த ஆஸ்துமா, 2016-ல் 100000 நபர்களில் 3336 நபர்களுக்கு இருந்தது. 26 வருடங்களில் 3.8 சதவீதம் எனும் அளவுக்கு இது குறைந்துள்ளது. 

பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள் மாநில அரசுகளின் பொறுப்பில் இருக்கும் போதிலும், பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகம் வழங்கி வருகிறது.

புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை முன்கூட்டியே தடுப்பதற்கான தேசிய திட்டத்தின் கீழ், 640 தொற்றா நோய்  சிகிச்சை மையங்கள் மாவட்ட அளவிலும், 5148 தொற்றா நோய்  சிகிச்சை மையங்கள் சமுதாய சுகாதார மைய அளவிலும் நிறுவப்பட்டுள்ளன. ஆஸ்துமா நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743136

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743144

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743143

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743140

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743137

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743135

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743139

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1743348) வருகையாளர் எண்ணிக்கை : 209
இந்த வெளியீட்டை படிக்க: English