வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
புதுதில்லியில் மயூர் விகார், திரிலோக்புரி-சஞ்சய் லேக் மெட்ரோ ரயில் நிலையங்கள் தொடக்கம்
Posted On:
06 AUG 2021 12:29PM by PIB Chennai
புது தில்லியில் மெட்ரோ ரயில் பாதையின் இளஞ்சிவப்பு வழித்தடத்தில் மயூர் விகார் பாக்கெட்-1 மற்றும் திரிலோக்புரி -சஞ்சய் லேக் மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன.
இவற்றை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி மற்றும் தில்லி முதல்வர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.
தில்லி மெட்ரோ ரயிலின் 59 கி.மீ நீளமுள்ள இளஞ்சிவப்பு வழித்தடத்தில், இந்த முக்கிய ரயில் நிலையங்கள் தொடங்கி வைக்கப்பட்டது புது தில்லியின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை, தெற்கு மற்றும் மத்திய தில்லி பகுதிகளில் உள்ள முக்கியமான சந்தைகள், மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதிகள், போக்குவரத்து மையங்களை இணைத்து தடையற்ற போக்குவரத்தை ஏற்படுத்தும்.
இந்த புதிய நிலையங்கள் திறக்கப்பட்டதன் மூலம் தில்லி மெட்ரோ நெட்வொர்க்கின் மொத்த தூரம் 390 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. இவற்றில் 285 ரயில் நிலையங்கள் உள்ளன.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, ‘‘ தற்போது 18 நகரங்களில் மெட்ரோ ரயில் நெட்வொர்க் 721 கி.மீ தூரத்துக்கு செயல்பாட்டில் உள்ளது. 27 நகரங்களில் 1,058 கி.மீ தூரத்துக்கும் மெட்ரோ ரயில் பாதை கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகின்றன’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743110
*****************
(Release ID: 1743306)
Visitor Counter : 184