சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பொறுப்பேற்றார்
प्रविष्टि तिथि:
06 AUG 2021 5:05PM by PIB Chennai
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பேராசிரியர் எம் கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை (2021 ஆகஸ்ட் 6) காலை 10 மணிக்கு பொறுப்பேற்றார்.
தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார குழுவின் (NAAC) மதிப்பெண்கள் மற்றும் தரவரிசையில் முன்னணி இடம் பிடித்து, உயர்சிறப்பு மையமாக பல்கலைக்கழகத்தை மாற்றுவதே தமது முன்னுரிமை என்று பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பேராசிரியர்களிடம் உரையாடிய பேராசிரியர் கிருஷ்ணன் கூறினார்.
அனைத்து பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி உள்கட்டமைப்பை தமது பணிக்காலத்திற்குள் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்வதற்கான முயற்சிகளை தாம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர், பிஆர்சி தலைவர் திரு பி எஸ் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
***


(रिलीज़ आईडी: 1743302)
आगंतुक पटल : 172
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English