அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நீரிழிவு நோயாளிகளின் நாள்பட்ட காயங்களுக்கு கட்டுப்போட நவீன பேண்டேஜ் : இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கம்
Posted On:
06 AUG 2021 11:47AM by PIB Chennai
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் நாள்பட்ட காயங்களுக்கு கட்டுப்போட நவீன பேண்டேஜை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இதில் ‘அகர்’ என்ற கடல் பாசி செடியிலிருந்து எடுக்கப்பட்ட இயற்கை பாலிமர் பயன்படுத்தப்படுகிறது. இது நீரிழிவு நோயாளிகளின் காயங்கள் மற்றும் நாள்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்க மிகச் சிறந்ததாக உள்ளது.
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த பேண்டேஜ்க்கு குறைந்த செலவு ஏற்படுகிறது. .
மக்கக்கூடிய, காயத்தை ஆற்றக்கூடிய இந்த பேண்டேஜை டாக்டர் விவேக் வர்மா தலைமையிலான கான்பூர் ஐஐடி குழுவினர் உருவாக்கியுள்ளனர். இதில் அயோடின் மற்றும் சிட்ரிக் அமிலம் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் மேம்பட்ட தயாரிப்பு தொழில்நுட்பங்கள் திட்டம் உதவியது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்கு தேசிய காப்புரிமை பெறப்பட்டுள்ளது. நவீன பேண்டேஜ்கள் தயாரிப்பில் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதால், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கண்டுபிடிப்பு, புதிய வர்த்தகத்துக்கு வழிவகுத்துள்ளது.
இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு டாக்டர் விவேக் வர்மாவை (vverma@iitk.ac.in) என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743076
*****************
(Release ID: 1743196)
Visitor Counter : 293