நிதி அமைச்சகம்

பரிமாற்ற விகித அறிவிக்கை எண். 65/2021- சுங்கம் (என்.டி.)

Posted On: 05 AUG 2021 7:46PM by PIB Chennai

சுங்கத்துறை சட்டம் 1962 (1962-ல் 52) பிரிவு 14-ல் அளிக்கப்பட்ட‍ அதிகாரத்தின் படி, மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம், எண் 59/2021-சுங்கத்துறை (என்.டி) 2021 ஜூலை 15-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் திருத்தங்களை செய்துள்ளது. இது 2021 ஆகஸ்ட் 6-ல் இருந்து அமலுக்கு வருகிறது.

ஒரு ஆஸ்திரேலிய டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 56.15 என்றும் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 53.75 என்றும் இருக்கும் என்று அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

ஒரு பஹ்ரேனிய தினாருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 203.30 என்றும் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 190.85 என்றும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கனடிய டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 60.35 என்றும் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 58.20 என்றும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு சீன யுவானுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 11.65 என்றும் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 11.30 என்றும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு யூரோவுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 89.45 என்றும் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 86.30 என்றும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 75.10 என்றும் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 73.40 என்றும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742902

 

-----



(Release ID: 1742964) Visitor Counter : 178


Read this release in: English , Hindi , Punjabi