பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

ராஷ்டிரீய மகிளா கோஷ் ஏற்படுத்துதல்

Posted On: 05 AUG 2021 5:14PM by PIB Chennai

ராஷ்டிரீய மகிளா கோஷ் 1993 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். இது தேசிய அளவிலான தன்னாட்சி அமைப்பு. இது பெண்களுக்கு, குறிப்பாக ஊரகப் பகுதியில் உள்ள, அமைப்புசாரா தொழில்களில் பணியாற்றும் பெண்களுக்கு மானிய விலையில், அடமானம் இல்லாமல் இலவச குறு-நிதி சேவையை வழங்குகிறது. ராஷ்டிரீய மகிளா திட்டமானது, நிதியை இடைநிலையில் உள்ள குறுநிதி நிறுவனங்களுக்கு வழங்கி, பின்னர் அவை பெண்களின் தொழில் முனைவு நடவடிக்கைகளுக்கு நிதி சேவை வழங்கும் வகையில் செயல்பட்டது.

இருப்பினும், கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் அரசு துறைகளில் சீரமைப்பு என்ற தலைப்பில் அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் தயாரித்த அறிக்கையில் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், ராஷ்டிரீய மகிளா கோஷ் அமைப்புகளை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்தது. தற்கால சூழலில் அவை தனது முக்கியத்துவத்தை இழந்ததோடு, அதற்கு மாற்றாக பெண்கள் நிதி வசதி பெற அரசின் முன்னெடுப்புகளான ஜன் தன் யோஜனா, பிரதம மந்திரி முத்ரா யோஜனா போன்றவை உள்ளதால் இத்திட்டம் கைவிட முடிவு செய்யப்பட்டது.

நிதி உதவி மூலமாக பெண்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகை செய்வதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ராஷ்டிரீய மகிளா கோஷ் திட்டத்தின்படி கடன் வழங்கும் விதிமுறைகள் கடந்த 2017-2018 முதல் திருத்தியமைக்கப்பட்டது. இதனால் மாநில வாரியாக பயன்பெற்ற பெண்களின் விவரம் பின் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் அங்கன்வாடி திட்டம்

இளம் பருவத்தில் குழந்தைகளுக்கு கவனம் செலுத்தி, வளர்ச்சி ஏற்படுத்த மத்திய அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவை திட்டத்தின் கீழ் அங்கன்வாடி சேவைகள் திகழ்கின்றன. இத்திட்டத்தின் கீழ் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் பயன்பெறுவர்.

அங்கன்வாடி சேவையின் கீழ், பயனாளிகளுக்கு கூடுதல் ஊட்டச் சத்து, பள்ளிக்கு முந்தைய கல்வி, ஊட்டச் சத்து மற்றும் ஆரோக்கிய கல்வி, தடுப்பு மருத்து செலுத்துவது, உடல் பரிசோதனை மற்றும் பரிந்துரை சேவைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் மூன்று திட்டங்கள், அதாவது தடுப்பு மருத்து செலுத்துவது, உடல் பரிசோதனை மற்றும் பரிந்துரை சேவைகள் ஆகியவை மருத்துவம் சார்ந்தது என்பதால் அவை தேசிய ஊரக ஆரோக்கிய திட்டம் மற்றும் பொது சுகாதார நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட் அங்கன்வாடி திட்டம் என்பது கேரள அரசின் முன்னெடுப்பாகும். அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் சேவைகளில், குழந்தைகளின் உடல் நலன், மன வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்த இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது தொடர்பான புதிய அங்கன்வாடி மையங்களை ஏற்படுத்த கேரள மாநிலம் 6 வகையான திட்டங்களை இறுதி செய்துள்ளது.

தேசிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவை (Integrated Child Development Services) திட்டத்தின் கீழ் கூடுதல் ஊட்டச் சத்து வழங்குதல்

கொரோனா பெருந்தொற்று காலத்தில், அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், அமைச்சகத்தின் உத்தரவின் பெயரில் பெருந்தொற்று விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அங்கன்வாடி பயனாளர்களுக்கு தொடர்ந்து உதவி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பயனாளர்களுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் மூலம் 15 நாட்களுக்கு ஒரு முறை பயனாளர்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் போஷன் டிராக்கர் எனும் தளம் மூலம் கண்காணிக்கப்பட்டது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் இடையே ஊட்டச் சத்து குறைபாடு

தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பின் (NFHS ) கீழ் ஊட்டச் சத்து தொடர்பான குறியீடுகள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையால் பதிவு செய்யப்படுகிறது. தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பு- 4 தகவல்களின்படி, 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் 35.7 எடை குறைவாகவும், 38.4 குழந்தைகள் வளர்ச்சி குறைவாகவும் உள்ளனர். முந்தைய தரவுகளுடன் ஒப்பிடுகையில் ஊட்டச் சத்து குறைபாடு குறைவது தெரிகிறது.

ஊட்டச் சத்து குறைபாடுகளைக் களைய மத்திய அரசு சார்பில் மிஷன் போஷன் 2.0 என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஊட்டச் சத்து மறுவாழ்வு மையங்களின் மதிப்பீடு

ஊட்டச் சத்து மறுவாழ்வு மையங்கள் 5 வயதுக்கு கீழ் உள்ள, அதீத ஊட்டச் சத்து குறைபாடு (Severe acute malnutrition) உள்ள குழந்தைகளுக்காக  ஏற்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களாகும். இங்கு மருத்துவ பிரச்சினைகளுடன் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் அனுமதிக்கப்படுகிறார்கள். மருத்துவக் குறைபாடுகள் ஏதுமில்லாமல் ஊட்டச் சத்து குறைபாடுடன் உள்ள குழந்தைகள் இங்கு அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் ஊட்டச் சத்து தொடர்பான நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இந்த மையங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 

போக்ஸோ -பாக்ஸ்

குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணையத்தின் தகவல்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் 356 புகார்கள் போக்ஸோ  -பாக்ஸ் மூலம் பெறப்பட்டுள்ளது. இவற்றில் 123 புகார்களுக்கு முழுமையாக தீர்வு காணப்பட்டுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வாரியான புகார்கள் குறித்த விவரங்கள் பின் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு அங்கன்வாடிகள் மூலம் கூடுதல் ஊட்டச் சத்து

பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச் சத்து நிலையை உயர்த்தும் வகையில் மத்திய அரசு கூடுதல் ஊட்டச் சத்து திட்டத்தின் (Supplementary Nutrition Programme (SNP)) கீழ் பல்வேறு திட்டங்கள் மூலம் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பள்ளிப் படிப்பை இடை நிறுத்திய இளம் பெண்களுக்கு மேலதிக ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது.  

நாட்டில் ஊட்டச் சத்து குறைபாட்டை போக்கும் வகையில் கடந்த மார்ச் 2018 ஆம் ஆண்டு போஷன் அபியான் திட்டம் தொடங்கப்பட்டது.

வட்சல்யா திட்டம்

குழந்தைகள் காப்பகங்கள், சிறப்பு தத்தெடுப்பு அமைப்புகள், திறந்தவெளி பாதுகாப்பு மையங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை, அவற்றில் உள்ள குழந்தைகளின் விபரங்கள் பின் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் திருமதி.ஸ்மிருதி இரானி அவர்களால் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742800

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742818

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742803

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742806

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742812

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742816

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742817

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742821

 

-------



(Release ID: 1742959) Visitor Counter : 213


Read this release in: English