பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
“பழங்குடியினர் உதவி ஆராய்ச்சி மையம்” மற்றும் “பழங்குடியின பண்டிகைகள், ஆராய்ச்சி, தகவல் மற்றும் வெகுஜன கல்வி” ஆகிய திட்டங்கள் மூலம் பழங்குடி மக்களின் கலாச்சாரம் வளர்ப்பு
பழங்குடி மக்களின் தேசப்பற்றை அங்கீகரிக்கும் வகையில் 10 பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஒப்புதல்
Posted On:
29 JUL 2021 5:58PM by PIB Chennai
மத்திய பழங்குடியின மக்கள் விவகாரத்துறை சார்பாக, “பழங்குடியினர் உதவி ஆராய்ச்சி மையம்” மற்றும் “பழங்குடியின பண்டிகைகள், ஆராய்ச்சி, தகவல் மற்றும் வெகுஜன கல்வி” ஆகிய திட்டங்கள் மூலம்:
• பழங்குடி மக்களின் சிறப்பு வாய்ந்த பாரம்பரியத்தை வளர்க்கும் வகையில் ஆராய்ச்சிகள், புத்தக வெளியீடு, ஆவணப் படங்கள் ஆகியவை வெளியிடல்.
• பழங்குடி கலாச்சார மாற்று நிகழ்ச்சிகள்
• பழங்குடி நாட்டு மருத்துவர்கள், மருத்துவ தாவரங்கள் பற்றியும், பழங்குடி மக்களின் மொழி, வேளாண்மை, நடனம் மற்றும் ஓவியம் ஆகியவற்றைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து ஆவணப்படுத்துதல்.
• நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் 10 பழங்குடி தலைவர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும். இங்கு அப்பகுதி பழங்குடி மக்களின் கலாச்சாரம் காட்சிப்படுத்தப்படும்.
• பழங்குடி மக்களின் தொன்மையான கலாச்சாரத்தை போற்றிப் பாதுகாக்கும் நோக்கிலும், இது பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், தேடுதலுடன் கூடிய டிஜிட்டல் தகவல் களஞ்சியம் ஏற்படுத்தப்பட்டு, அதில் ஆராய்ச்சி படிப்புகள், ஆவணங்கள், புத்தகங்கள், நாட்டுப்புற பாடல்கள், புகைப்படங்கள், காணொலிகள், ஆகியவை சேமிக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் மத்திய பழங்குடி விவகாரத்துறை இணையமைச்சர் திருமதி.ரேணுகா சிங் சாருத்தா மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக வழங்கினார்.
2022 ஆம் ஆண்டுக்குள் 742 ஏகலைவன் மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் அமைக்க திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது 632 பள்ளிகள் அமைக்க ஒப்புதல்- அமைச்சர் திரு.அர்ஜுன் முன்டா
• ஏகலைவன் மாதிரி பள்ளிகளின் சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில் 2018 ஆம் ஆண்டு இதற்கென தனியாக மத்திய திட்டம் தொடங்கப்பட்டது.
• 2022 ஆம் ஆண்டுக்குள், நிலம் இருப்புக்கு ஏற்ப ஒட்டுமொத்தமாக 740 ஏகலைவன் பள்ளிகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்படும்.
• இதுவரை 632 ஏகலைவன் பள்ளிகள் தொடங்க ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.
• 367 ஏகலைவன் பள்ளிகள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் 85,232 மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
• இவை நவோதையா பள்ளிகளுக்கு இணையான தரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை மத்திய பழங்குடி விவகாரத்துறை அமைச்சர் திரு.அர்ஜூன் முன்டா மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740383
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740382
*****************
(Release ID: 1740483)
Visitor Counter : 523