ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளித் துறை மேம்பாட்டிற்காக தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட நிதி மற்றும் பயிற்சி பெற்றவர்களின் விவரம்
Posted On:
29 JUL 2021 5:18PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய ஜவுளி இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோசின் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் 2020-21-ம் ஆண்டு ரூ 397.28 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2018-19-ல் ரூ 10.65 கோடியும், 2019-20-ல் ரூ 32.87 கோடியும், 2020-21-ல் ரூ 48.49 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 2018-19-ல் ரூ 21.03 கோடியும், 2019-20-ல் ரூ 180.24 கோடியும், 2020-21-ல் ரூ 397.28 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய கைத்தறி வளர்ச்சி திட்டம் மற்றும் விரிவான கைத்தறி குழு வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2018-19-ல் ரூ 5.780 கோடியும், 2019-20-ல் ரூ 0.240 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 2018-19-ல் ரூ 28.810 கோடியும், 2019-20-ல் ரூ 22.080 கோடியும், 2020-21-ல் ரூ 20.405 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி ஆணையர் (கைத்தறி) அலுவலகத்தின் அனைத்து திட்டங்களின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2018-19-ல் ரூ 78.23 கோடியும், 2019-20-ல் ரூ 117.92 கோடியும், 2020-21-ல் ரூ 743.16 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 2018-19-ல் ரூ 8835.80 கோடியும், 2019-20-ல் ரூ 14716.94 கோடியும், 2020-21-ல் ரூ 18704.57 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
பட்டு சமக்ரா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2018-19-ல் ரூ 619.91 கோடியும், 2019-20-ல் ரூ 1452.22 கோடியும், 2020-21-ல் ரூ 1437.52 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 2018-19-ல் ரூ 4585.12 கோடியும், 2019-20-ல் ரூ 14481.08 கோடியும், 2020-21-ல் ரூ 14755.76 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
விரிவான ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஜவுளித்துறையின் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 11.14 லட்சம் பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. 8.43 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6337 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ள நிலையில், 4114 பேர் பயிற்சியில் உள்ளனர் மற்றும் 4738 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2020 அக்டோபர் முதல் 2021 ஏப்ரல் வரை செய்யப்பட்ட மொத்த பருத்தி ஏற்றுமதியான 54.83 லட்சம் பேல்களில், 21.97 லட்சம் பேல்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. வங்கதேசம், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, ஓமன், துருக்கி, இத்தாலி, மொரீஷியஸ் நாடுகளுக்கும் பருத்தி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரையிலான பருத்தி நூல் மொத்த ஏற்றுமதியான 980 மில்லியன் கிலோவில், 275 மில்லியன் கிலோ சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. வங்கதேசம், வியட்நாம், பெரு, போர்ச்சுகல், எகிப்து, கொரியா, கொலம்பியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கும் பருத்தி நூல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740345
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740346
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740344
*****************
(Release ID: 1740479)