சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

சென்னை உள்ளிட்ட 10 நகரங்களில் பிச்சைக்காரர்களின் நலனுக்காக விரிவான நடவடிக்கைகளுடன் கூடிய திட்டத்தை அரசு வகுத்துள்ளது

Posted On: 20 JUL 2021 7:34PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் திரு ஏ நாராயணசாமி கீழ்கண்ட தகவல்களை அளித்தார்.

ஸ்மைல் எனப்படும் விளிம்பு நிலையில் உள்ள தனிநபர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலுக்கு ஆதரவு எனும் திட்டத்தின் துணை திட்டமாக பிச்சை எடுப்பதில் ஈடுபட்டுள்ளவர்களின் மறுவாழ்வுக்கான விரிவான மத்திய துறை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு,  மருத்துவ வசதிகள், மனநல ஆலோசனை, அடிப்படை ஆவணங்கள், கல்வி, திறன் வளர்த்தல் மற்றும் பொருளாதார தொடர்புகள் ஆகியவற்றை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், இந்தூர், லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா மற்றும் அகமதாபாத் ஆகிய 10 நகரங்களில் பிச்சை எடுப்பதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விரிவான மறுவாழ்வை வழங்குவதற்கான மாதிரி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக்  காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737322

 

---

----



(Release ID: 1737392) Visitor Counter : 343


Read this release in: English , Marathi