சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

கொவிட் கட்டுப்பாட்டுக் காலத்தில், தேசிய நெடுஞ்சாலை கட்டுமானம் மிகவும் அதிகரித்துள்ளது : திரு நிதின் கட்கரி

Posted On: 20 JUL 2021 3:23PM by PIB Chennai

கொவிட் கட்டுப்பாட்டுக் காலத்தில், தேசிய நெடுஞ்சாலை கட்டுமானம் மிகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  திரு நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் அவர் விடுத்துள்ள செய்தியில், 2020-21ம் ஆண்டில் நெடுஞ்சாலை கட்டுமானம் நாள் ஒன்றுக்கு 36.5 கி.மீ என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தில் மிக அதிகமான வேகம் என குறிப்பிட்டுள்ளார்.

24 மணி நேரத்தில் 2.5 கி.மீ தூரத்துக்கு நான்கு வழி கான்கிரீட் சாலை அமைத்தும், 21 மணி நேரத்தில் 26 கி.மீ தூரத்துக்கு ஒற்றை வழி தார் சாலை அமைத்தும், இந்தியா உலக சாதனை படைத்துள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

இந்த கட்டுமான வேகத்தை தக்க வைக்க, சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். இதில் ஒப்பந்தகாரர்களுக்குத் தேவையான உதவி, விதிமுறையில் தளர்வு, துணை ஒப்பந்தகாரர்களுக்கு நேரடி பண விநியோகம், சாலை பணியாளர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவை அடங்கும்.

 

இந்தத் திட்டங்களில் தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்ய சாலை கட்டுமானங்கள், இந்திய சாலைகள் அமைப்பு (IRC) தரக்கட்டுப்பாடுடனும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் விவரக் குறிப்புகளுடனும், மேற்கொள்ளப்படுகின்றன என திரு நிதின்கட்கரி கூறினார். தர மேம்பாட்டு முறைக்கு,    கொள்கை வழிகாட்டுதல், பரிசோதனை மற்றும் உத்தரவுகளை அவ்வப்போது தெரிவிக்க தரக்கட்டுப்பாடு மண்டலம் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737170

*****



(Release ID: 1737256) Visitor Counter : 185