வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஜூன் மாதத்திற்கான மொத்த விலைக் குறியீட்டு எண் விவரம்

प्रविष्टि तिथि: 14 JUL 2021 12:00PM by PIB Chennai

இந்தியாவில் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் (தற்காலிகம்) மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான (இறுதி) மொத்தவிலை குறியீட்டு எண்களை (அடிப்படை ஆண்டு: 2011-12)  தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளதுநாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையில் மொத்தவிலை குறியீடுகளின் தற்காலிக எண்கள் ஒவ்வொரு மாதமும் 14-ஆம் தேதி (அல்லது அடுத்த வேலை நாளில்) இரண்டு வார கால தாமத்துடன் வெளியிடப்படுகிறது. 10 வாரங்களுக்குப் பிறகு, இந்த விலைக் குறியீடு இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும்

2020 ஜூன் மாதத்தின் பணவீக்க விகிதமான -1.81 சதவீதத்தை விட 2021 ஜூன் மாதத்திற்கான ஆண்டு பணவீக்க விகிதம்   12.07 சதவீதமாக (தற்காலிகம்) அதிகரித்தது.   கடந்தாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், குறைவான அடிப்படை விளைவு மற்றும் பெட்ரோல், டீசல்நாஃப்தா போன்ற எண்ணெய்கள் மற்றும் அடிப்படை உலோகம் உணவுப் பொருட்கள் ரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவை, 2021 ஜூன் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்ததற்கு முக்கிய காரணம். 2021 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் மொத்தவிலை குறியீட்டு எண்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் 0.75 சதவீதம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735298

*****

(Release ID: 1735298)


(रिलीज़ आईडी: 1735328) आगंतुक पटल : 311
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी