புவி அறிவியல் அமைச்சகம்

தமிழகம், காரைக்கால், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

प्रविष्टि तिथि: 20 JUN 2021 6:43PM by PIB Chennai

தமிழகம், காரைக்கால், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வடக்கு  மற்றும் வடகிழக்கு மாநிலங்களில்  ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் கூறியுள்ளது.

அது விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

கிழக்கு உத்தரப்பிரதேசம்பீகார்உத்தரகாண்ட், ஜார்கண்ட், மேற்கு வங்கம்சிக்கிம், அசாம்மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் , திரிபுரா, குஜராத் மத்திய மகாராஷ்டிராவின்  மலைப் பகுதிகள், கொங்கன் மற்றும் தெற்கே கோவாகர்நாடகா, கேரளா மற்றும் மாஹேவின்  கடலோரம் மற்றும் தென் பகுதிகளில்  ஒரு சில இடங்களில் இன்று கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது

உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் தில்லியில்  ஒரு சில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன்  இன்று மழை பெய்யும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் வடக்கு கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஒரு சில இடங்களில் இன்று மின்னலுடன்  மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728820

 


(रिलीज़ आईडी: 1728869) आगंतुक पटल : 206
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी