பாதுகாப்பு அமைச்சகம்

கடற்படை அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழா

Posted On: 04 JUN 2021 3:06PM by PIB Chennai

இந்திய கடற்படையில் அதிகாரி பயிற்சி பெற்ற 104 பேரின் பயிற்சி நிறைவு விழா கொவிட்-19 காரணமாக அமலில் உள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக எளிமையான, அதே சமயம், உற்சாகமூட்டும் முறையில் 2021 ஜூன் 4 அன்று நடைபெற்றது.

99-வது ஒருங்கிணைந்த அதிகாரி பயிற்சி திட்டத்தின் கீழ் மேற்கண்ட நபர்களுக்கு கப்பல்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. கப்பல்களில் நடைபெற்ற நிறைவு விழாவில் ரியர் அட்மிரல் அந்தோனி ஜார்ஜ், விஎஸ்எம், என்எம், தெற்கு கடற்படை பிரிவின் தலைவர், சிறப்பான முறையில் பயிற்சி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

இந்திய கடற்படை கப்பல்களான தீர், மகர், ஷர்தூல், சுஜாதா, தரங்கினி, சுதர்ஷினி மற்றும் கடலோர காவல் படை கப்பலான சாரதியில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேற்கண்ட கப்பல்கள் ஐஎன்எஸ் தீரின் தலைமை அதிகாரியான கேப்டன் அஃப்தாப் அகமது கானின் தலைமையிலான முதலாம் பயிற்சி குழுவின் கீழ் வருகின்றன.

2020 டிசம்பர் 29 அன்று தொடங்கிய பயிற்சியின் போது, கப்பலின் பல்வேறு பிரிவுகள் மற்றும் அம்சங்கள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. கடலில் 67 நாட்களை செலவிட்ட பயிற்சியாளர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு துறைமுகங்கள் மட்டுமில்லாமல், மொரிஷியஸ் (போர்ட் லூயிஸ்), செஷல்ஸ் (போர்ட் விக்டோரியா), மடகாஸ்கர் (ஆண்ட்சிரனானா) மற்றும் மாலத்தீவு (மாலே) ஆகிய நாடுகளில் உள்ள துறைமுகங்களையும் பார்வையிட்டனர்.

அடுத்த கட்ட பயிற்சியை இவர்கள் பல்வேறு முன்னணி இந்திய கடற்படை போர் கப்பல்களில் தொடர உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724389

-----



(Release ID: 1724453) Visitor Counter : 179


Read this release in: English , Urdu , Hindi , Malayalam