புவி அறிவியல் அமைச்சகம்

தென்மேற்கு பருவமழை கேரளாவில் 2021 மே 31 வாக்கில் முன்கூட்டியே தொடங்கவுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAY 2021 6:32PM by PIB Chennai

இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் படி:

♦   மாலத்தீவு-கமோரின் பகுதி,   தென்மேற்கு மற்றும் கிழக்கு மத்திய வங்காள விரிகுடா, தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவின் சில பகுதிகளில் இன்று காலை தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது.

♦      தென்மேற்கு பருவமழை கேரளாவில் 2021 மே 31 வாக்கில் முன்கூட்டியே தொடங்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

 27 மே (நாள் 1):

♦       பீகாரில் சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை, கிழக்கு உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமின் சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை, வடக்கு சத்தீஸ்கர், அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஒடிசா, அசாம், மேகாலயா, தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால் மற்றும் கேரளா & மாகேவில் உள்ள சில பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும்.

28 மே (நாள் 2):

♦     தென்மேற்கு மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு அரபிக் கடல் மற்றும் தென்மேற்கு மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் கமோரின் பகுதி, கடற்கரையோர ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா மற்றும் லட்சத்தீவு கடற்கரையோர பகுதிகளில் பலத்த காற்று (மணிக்கு 40-50 வேகத்தில்) வீசக்கூடும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 *****************


(வெளியீட்டு அடையாள எண்: 1722266) வருகையாளர் எண்ணிக்கை : 216
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी