அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பல்லுயிர் பாதுகாப்பிற்கான இயற்கை மற்றும் கலாச்சார அடிப்படையிலான தீர்வுகளின் முக்கியத்துவம் குறித்து சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினத்தில் விவாதிக்கப்பட்டன

Posted On: 25 MAY 2021 5:14PM by PIB Chennai

பல்லுயிர் பாதுகாப்பின் பல அம்சங்கள், தொழில்நுட்பத்துடன் இதன் தொடர்பு, நிலையான வளர்ச்சி ஆகியவை குறித்து, சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை  தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள நிபுணர்கள் விவாதித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பயோநெஸ்ட், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட கல்வி மையம்(IASST), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் தன்னாட்சி மையமான குவஹாதியில் உள்ள பஸ்சிம் பரோகான் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சியில்பல்லுயிர் மற்றும் தொழில்நுட்பம் : ஒருங்கிணைந்த இயற்கை-கலாச்சார தீர்வுகளை நோக்கிஎன்ற தலைப்பில் டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு மையத்தின் பிரபல விஞ்ஞானி டாக்டர் ரமேஷ் கிருஷ்ண மூர்த்தி பேசினார். அப்போது பல்லுயிர் பாதுகாப்புக்கு இயற்கை மற்றும் கலாச்சார அடிப்படையிலான தீர்வுகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்

நிலையான வளர்ச்சி சவால்கள் பலவற்றுக்கு பல்லுயிர் பெருக்கம்தான் பதில் அளிக்கிறது என  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட கல்வி மையத்தின் இயக்குனர் போராசிரியர் ஆசிஸ் கே.முகர்ஜி வலியுறுத்தினார். அழிவிலிருந்து பல்லுயிர்களை காப்பதற்கும், நாம் நமது சிறந்த முயற்சிகளை அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721643

                                                        **


(Release ID: 1721717) Visitor Counter : 197