தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

பணியாளர்களின் குறைகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட 20 கட்டுப்பாட்டு அறைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன

Posted On: 20 APR 2021 3:04PM by PIB Chennai

கொவிட்-19 பரவலின் காரணமாக மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக 2020 ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்பட்ட 20 கட்டுப்பாட்டு அறைகளுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் புத்துயிர் அளித்துள்ளது.

பணியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை மாநில அரசுகளின் உறுதுணையோடு தீர்ப்பதற்காக தலைமை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தின் கீழ் நாடு முழுவதும் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறைகளின் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குறைகள் கடந்த வருடம் களையப்பட்டன.

கைபேசி, வாட்ஸ்அப், மற்றும் மின்னஞ்சல்களின் மூலம் தொழிலாளர்கள் இந்த கட்டுப்பாட்டு மையங்களை தொடர்பு கொள்ளலாம். அந்தந்த இடங்களில் உள்ள‌ தொழிலாளர் அமலாக்க அலுவலர்கள், உதவி தொழிலாளர் ஆணையர்கள், மண்டல தொழிலாளர் ஆணையர்கள் மற்றும் துணை தலைமை தொழிலாளர் ஆணையர்கள் ஆகியோரால் இந்த கட்டுப்பாட்டு அறைகள் நிர்வகிக்கப்படுகின்றன. (மத்திய) தலைமையிட‌ தலைமை தொழிலாளர் ஆணையரால் இந்த 20 மையங்களின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு மேற்பார்வையிடப்படுகின்றன.

 

மனிதநேயமிக்க அணுகுமுறையை தொழிலாளர்களிடம் கையாளுமாறும் அவர்களது குறைகளை விரைவில் தீர்க்க உதவுமாறும் அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெருந்தொற்றின் காரணமாக பெரிய அளவில் சவால்கள் ஏற்பட்டுள்ளதால் பல விதங்களில் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அர்ப்பணிப்பு மிக்க அலுவலர்களின் குழு அவர்களது குறைகளை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு தீர்த்துவைக்கும் என்றும் (மத்திய) தலைமையிட‌ தலைமை தொழிலாளர் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு & புதுச்சேரியில் உள்ள‌ அலுவலர்களின் விவரங்கள்உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

திரு. அண்ணாதுரை, மண்டல தொழிலாளர் ஆணையர் (RLC(C)), support-dylcchn[at]nic[dot]in,                    9884576490

திரு ஆர் சிவகுமார், உதவி தொழிலாளர் ஆணையர் (ALC©), support-dylcchn[at]nic[dot]in, 9840922016

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1712849

*****************

 



(Release ID: 1712879) Visitor Counter : 354