சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

‘ஃபோனிக்ஸ் வாயிலாக வாசிக்கும் திறனை வளர்த்தல்’ பற்றிய பயிலரங்கிற்கு கேந்திரிய வித்யாலயா ஏற்பாடு

Posted On: 22 MAR 2021 6:45PM by PIB Chennai

ஃபோனிக்ஸ் என்று அழைக்கப்படும் உச்சரிப்பின் வாயிலாக வாசிக்கும் திறனை வளர்ப்பது குறித்து ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக மூன்று நாள் பயிலரங்கை மார்ச் 22 முதல் 24-ஆம் தேதி வரை சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை மண்டலத்தில் உள்ள சுமார் 28 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 90 ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ஃபோனிக்ஸ் என்பது மனித குரல் உச்சரிப்பு சம்பந்தமான மொழியியலின் ஓர் அங்கமாகும். ஒவ்வொரு குழந்தையின் கல்வியிலும் உச்சரிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

கேந்திரிய வித்யாலயா சங்கதனின் சென்னை மண்டல துணை ஆணையர் டாக்டர் திருமதி எம். ராஜேஸ்வரி முன்னிலையில்சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையின் பேராசிரியர் டாக்டர் எஸ் பி தனவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த பயிலரங்கைத் துவக்கி வைத்தார்.

உச்சரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கேந்திரிய  வித்யாலயா பள்ளியின் முதல்வர் டாக்டர் எம் மாணிக்க சாமி, மாணவர்களின் வளர்ச்சியில் ஆசிரியர்கள் மிகப்பெரும்  பொறுப்பு வகிப்பதாகக் குறிப்பிட்டார்.

 

வாசித்தல், எழுதுதல் மற்றும் பேச்சில் மொழியைக் கற்பித்தல் திறனின் வழிகள் பற்றி ஆசிரியர்களுக்கு எடுத்துரைப்பதே இந்த பயிலரங்கத்தின் நோக்கமாகும்.

தமது முக்கிய உரையில், மொழி திறனை வளர்ப்பதன் அவசியம் பற்றி டாக்டர் எம் ராஜேஸ்வரி விரிவாக எடுத்துரைத்தார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கு ஆரம்ப மற்றும் தொடக்க கல்வியில் இருந்தே  தயாராக  வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வாசிப்பு திறனை வளர்ப்பதில் ஃபோனிக்ஸின் முக்கியத்துவத்தை பேராசிரியர் டாக்டர் எஸ் பி தனவேல் வலியுறுத்தினார். மாணவர்கள் தவறான வார்த்தை உச்சரிப்பை பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் சரியான உச்சரிப்பை அவர்கள் உபயோகிக்க ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

.*****************


(Release ID: 1706710) Visitor Counter : 82


Read this release in: English