அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
வெப்ப கழிவுகளிலிருந்து வீட்டு உபயோக பொருட்களை இயக்கும் ஈயம் இல்லாத புதிய பொருளை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
Posted On:
23 FEB 2021 12:19PM by PIB Chennai
வெப்ப கழிவுகளிலிருந்து சிறிய வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் வாகனங்களை இயக்கும் வகையில் ஈயம் இல்லாத புதிய பொருளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் பெங்களூருவின் ஜவஹர்லால் நேரு அறிவியல் மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் கனிஷ்கா பிஸ்வாஸ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, காட்மியம் மாசு ஊட்டப்பட்ட சில்வர் ஆன்டிமோனி டெலுரைட் என்ற ஈயம் இல்லாத பொருளை கண்டறிந்துள்ளது.
தங்களது இந்த கண்டுபிடிப்பு குறித்த விரிவான தகவல்களை சயின்ஸ் என்ற சஞ்சிகையில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். ஸ்வர்ண ஜெயந்தி ஊக்கத்தொகை, அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் திட்ட நிதி உதவியைப் பெற்றுள்ள இந்த கண்டுபிடிப்பிற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, புதிய வேதியியல் பிரிவு மற்றும் பெங்களூருவின் ஜவஹர்லால் நேரு அறிவியல் மேம்பாட்டு ஆராய்ச்சி மையம் ஆகியவை ஆதரவளித்து வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700121
(Release ID: 1700320)
Visitor Counter : 237