பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய விமானப்படைப் பிரிவுடன், அசாம் மற்றும் அருணாச்சல் படைப்பிரிவுகள் இணைப்பு
Posted On:
15 FEB 2021 4:11PM by PIB Chennai
இந்திய விமானப்படையின் 106-வது படைப்பிரிவுடன், இந்திய ராணுவத்தின் அசாம் மற்றும் அருணாச்சல் படைப்பிரிவுகளை இணைக்கும் நிகழ்ச்சி அசாம் மாநிலத்தில் உள்ள தேஸ்பூரில் இன்று நடைப்பெற்றது.
இந்த இணைப்பு விழாவில் அணிவகுப்பு மரியாதையை அசாம் படைப்பிரிவு மற்றும் அருணாச்சல் ஸ்கவுட்ஸ் படைப்பிரிவுகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் பி.எஸ் பேல் ஏற்றுக்கொண்டார்.
படைப்பிரிவுகளின் இணைப்பு சாசனத்தில் மேஜர் ஜெனரல் பி.எஸ். பேல், விமானப்படையின் 106 வது படைப்பிரிவு தலைமை அதிகாரி குரூப் கேப்டன் வரூண் ஸ்லேரியா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
விமானப்படையின் 106 வது படைப்பிரிவு, கிழக்கு பகுதியில் சுகாய் போர் விமானங்களுடன் உள்ளது. இவர்களுக்கு உதவியாக, ராணுவத்தின் இந்த இரு படைப்பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.
கிழக்கு எல்லைப் பகுதியில் தற்போது நிலவும் முரண்பாடான சூழலில், இந்த இணைப்பு ராணுவ படைகளின் கூட்டு நெறிமுறைகளில் பரஸ்பர புரிதலை அதிகரிக்கும்.
அசாம் படைப்பிரிவு கடந்த 1941ம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இப்படைப்பிரிவு 2 ஆம் உலகப் போரில் 6 போர் கவுரவங்களை பெற்றுள்ளது.
விமானப்படையின் 106 வது படைப்பிரிவு 1959 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
இப்பிரிவில் சுகாய் போர் விமானங்கள் உள்ளன.
இந்நிகழ்ச்சியில் பேசிய மேஜர் ஜெனரல் பி.எஸ்.பேல், இந்த இணைப்பின் முக்கியத்துவம் மற்றும் நீண்ட கால தாக்கம் குறித்து பேசினார்.
படைப்பிரிவுகளின் செயல்பாட்டு நெறிமுறைகளை புரிந்து கொள்ளுதல், படைப் பிரிவுகளுக்கு இடையே நட்புறவை உருவாக்குதல் ஆகியவை இந்த இணைப்பின் பின்னால் உள்ள விஷயங்கள் என அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698125
-----
(Release ID: 1698214)
Visitor Counter : 234