பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியினரின் நலனுக்காக அரசு சாரா நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த விவரங்கள்

Posted On: 11 FEB 2021 5:31PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் இணை அமைச்சர் திருமதி ரேணுகா சிங், கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

கல்வி, ஆரோக்கியம், சுகாதாரம், தண்ணீர் விநியோகம், திறன் வளர்த்தல், வாழ்வாதாரம் ஆகியவற்றில் ஒட்டுமொத்த வளர்ச்சியை நாடு முழுவதுமுள்ள பழங்குடியினர் அடைவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

பழங்குடியினரின் நலனுக்காக செயல்படும் தன்னார்வ அமைப்புகளுக்கான நிதியுதவிமற்றும்குறைந்த அளவு கல்வியறிவு உள்ள மாவட்டங்களில் பழங்குடியின மாணவிகளின் கல்வியை வலுப்படுத்துதல்ஆகிய இரண்டு திட்டங்களை மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டங்களுக்கு கடந்த இரண்டு வருடங்களில் ஒதுக்கப்பட்ட நிதியின் விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.

இது தவிர, அடல் ஓய்வூதிய திட்டம், உதவித்தொகை திட்டம், பாஹல்-சமையல் எரிவாயுக்கான நேரடி பலன் பரிவர்த்தனை, பிரதமரின் ஆவாஸ் திட்டம், பிரதமரின் விவசாயிகள் நல நிதி, பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டம் ஆகியவற்றின் மூலம் நேரடி பலன் பரிவர்த்தனை முறையின் மூலம் பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697139

***(Release ID: 1697254) Visitor Counter : 166


Read this release in: English , Manipuri