சுற்றுலா அமைச்சகம்
2021-22ம் நிதியாண்டில், சுற்றுலாத்துறை அமைச்சகத்துக்கான ஒதுக்கீடு ரூ.2026.77 கோடி : 61 சதவீதம் அதிகம்
Posted On:
10 FEB 2021 5:45PM by PIB Chennai
2021-22ம் நிதியாண்டில், சுற்றுலாத்துறை அமைச்சகத்துக்கு ரூ.2026.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டு ஒதுக்கீட்டை விட 61 சதவீதம் அதிகம்.
சுற்றுலாத்துறை செயலாளர் திரு அரவிந்த் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:
2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், சுற்றுலாத்துறை அமைச்சகத்துக்கு ரூ.2026.77 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டில் சுற்றுலாத்துறை அமைச்சகத்துக்காக மாற்றியமைக்கட்ட பட்ஜெட் தொகை ரூ.1260 கோடி. இதை விட 2021-22ம் ஆண்டுக்கான ஒதுக்கீடு 61 சதவீதம் அதிகம்.
இந்த தொகையில் ரூ.950 கோடி பல இடங்களில் சுற்றுலாத்துறை கட்டமைப்புக்கு செலவிடப்படும். சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.670 கோடி செலவிடப்படும்.
இவ்வாறு திரு அரவிந்த் சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696828
------
(Release ID: 1696894)
Visitor Counter : 143