திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

வேலையில்லா இளைஞர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ரூ.7,115 கோடி ஒதுக்கப்பட்டது

Posted On: 08 FEB 2021 4:23PM by PIB Chennai

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழிமுனைவு இணையமைச்சர் ராஜ் குமார் சிங், மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

* பிரதமரின் கவுசல் விகாஸ் திட்டத்தின் கீழ் பயிற்சி மையங்கள் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கடந்த ஜனவரி 19ம் தேதி வரை 15,124 பயிற்சி மையங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டன. தற்போது 1,595 பயிற்சி மையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

* கடந்த  2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை 36.04 லட்சம் பேருக்கு குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவர்களில் 18.95 லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டனர்.

* பிரதமரின் கவுசல் விகாஸ் திட்டத்தை அமல்படுத்த  கடந்த  2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை  தோரயமாக ரூ.7,115 கோடி செலவிடப்பட்டது.  

* பிரதமரின் கவுசல் விகாஸ் திட்டத்தின் கீழ் கடந்த  2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, நாட்டில் உள்ள ஒரு கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 19ம் தேதி வரை 1.07 கோடி பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.

* நாடு முழுவதும் 8 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில், பிரதமரின் கவுசல் விகாஸ் திட்டம் 3.0 கடந்த ஜனவரி 15ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.

*********************


(Release ID: 1696313) Visitor Counter : 133


Read this release in: English , Manipuri