விவசாயத்துறை அமைச்சகம்

வேளாண் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 05 FEB 2021 7:39PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

லாபமளிக்கும் வேளாண் முறைகளை நாட்டில் உருவாக்கி ஊக்குவிப்பதற்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை இந்திய அரசு ஆதரிக்கிறது.

18 மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் பங்களிப்புடன் 63 விவசாய முறைகளை இந்திய வேளாண் ஆராய்ச்சி குழு மற்றும் ஒருங்கிணைந்த விவசாய முறைகளுக்கான அகில இந்திய கூட்டு ஆராய்ச்சி திட்டம் ஆகியவை உருவாக்கியுள்ளன.

இயற்கை விவசாய நடைமுறைகளின் தொகுப்பை உருவாக்குவதற்காக, 16 மாநிலங்களில் 20 ஒத்துழைப்பு மையங்களுடன் அகில இந்திய இயற்கை விவசாய ஆராய்ச்சி திட்டத்தை இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுவின் வேளாண் முறைகள் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்துகிறது.

மேலும், 722 வேளாண் ஆராய்ச்சி மையங்களை (கேவிகே) கொண்டுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி குழு, இயற்கை விவசாயம் உள்ளிட்ட வேளாண்மையின் பல்வேறு கூறுகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கிறது.

சோயாபீன்ஸ் ஆராய்ச்சிக்கான தேசிய அளவிலான நிறுவனத்தை 1987-ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சி குழு மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் அமைத்தது.

ஒடிசா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழும் ஒரு தன்னார்வ மையம் செயல்படுகிறது.

இதற்கிடையே, அமைப்புரீதியான கடன் வசதியுடன் அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைக்கும் விதமாக 2021-22-க்கான கள அளவிலான கடன் இலக்கு ரூ 13.50 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2013-14-ஆண்டு ரூ 7 லட்சம் கோடியாக இது இருந்தது.

விவசாயிகளுக்கு போதுமான கடனை வழங்குவதற்காக, வேளாண் கடன் இலக்கை ரூ 16.5 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளதாகவும், கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைகளுக்கும் கடன் வழங்கப்படும் என்றும் தமது சமீபத்திய பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

------


(रिलीज़ आईडी: 1695678) आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English