அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பெண் விஞ்ஞானிகள் மற்றும் புது நிறுவனங்களுக்கு ஊக்கமளித்தல் குறித்து நாடாளுமன்றத்தில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அளித்த பதில்கள்
Posted On:
02 FEB 2021 7:46PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அறிவியல் & தொழில்நுட்பம், புவி அறிவியல் மற்றும் சுகாதாரம் & குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கீழ்கண்ட தகவல்களை அளித்தார்.
ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளில் பெண்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் சட்டப்பூர்வ அமைப்பான அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம், செர்ப்-பவர் என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சிகளுக்கான நிதி வழங்கலில் பாலின பாகுபாடை குறைக்கவும், ஆராய்ச்சிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
புதுமைகள் மற்றும் தொழில் தொடங்குவதற்கான சூழலை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களுக்கு தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில் முனைதல் மேம்பாட்டு வாரியம் ஆதரவளித்து வருகிறது.
கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதற்கான கவச் என்னும் முன்னெடுப்பின் கீழ், 51 புது நிறுவனங்களுக்கு தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைதல் மேம்பாட்டு வாரியம் ஆதரவளித்துள்ளது.
தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைதல் மேம்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைகளால் பல புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) பயனடைந்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694547
------
(Release ID: 1694630)
Visitor Counter : 170