ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

எஃப் சி ஐ ஆரவல்லி ஜிப்சம் & மினெரல்ஸ் இந்தியா நிறுவனம் ரூ 12.51 கோடி ஈவுத்தொகையை மத்திய ரசாயனம் & உரங்கள் அமைச்சரிடம் வழங்கியது

Posted On: 28 JAN 2021 6:15PM by PIB Chennai

எஃப் சி ஆரவல்லி ஜிப்சம் & மினெரல்ஸ் இந்தியா நிறுவனம், 2019-20-ஆம் ஆண்டுக்கான ஈவுத்தொகையான ரூ 12.51 கோடியை மத்திய ரசாயனம் & உரங்கள் அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடாவிடம் இன்று வழங்கியது.

எஃப் சி ஆரவல்லி ஜிப்சம் & மினெரல்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரிகாடியர் அமர் சிங் ராத்தோர் இதை அமைச்சரிடம் வழங்கினார். செயலாளர் (உரங்கள்) திரு ராஜேஷ் குமார் சதுர்வேதி உடனிருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக எஃப் சி ஆரவல்லி ஜிப்சம் & மினெரல்ஸ் இந்தியா நிறுவனம் ஈவுத்தொகையை தொடர்ந்து செலுத்தி வருவதாகவும், 17 வருடங்களில் ரூ 101.34 கோடியை செலுத்தியுள்ளதாகவும் கூறிய அமைச்சர், ஆரம்ப கால முதலீடான ரூ 7.33 கோடியுடன் ஒப்பிடும் போது இது 1382 சதவீதம் ஆகும் என்றார்.

இது வரை அடைந்துள்ள வளர்ச்சிக்காக நிறுவனத்தை வாழ்த்திய அவர், எஃப் சி ஆரவல்லி ஜிப்சம் & மினெரல்ஸ் மேலும் வளர்ச்சியை அடைய வேண்டும் என்றார். 2003-ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

**



(Release ID: 1693033) Visitor Counter : 111