சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

ரூ.1.75 கோடி மதிப்புள்ள 3.46 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

Posted On: 24 JAN 2021 5:29PM by PIB Chennai

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி மதிப்புள்ள 3.46 கிலோ தங்கம், சிகரெட்டுகள், பயன்படுத்திய லேப்டாப் ஆகியவற்றை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

உளவுத் தகவல் அடிப்படையில், துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த கடலூரைச் சேர்ந்த சையத் முஸ்தபா, அசாருதீன், அஜ்மல் கான், சையது முகமது, சுல்தான் சலாஹூதீன் ஆகிய 5 பேரிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இவர்கள் 18 தங்க பசை பொட்டலங்களை அவர்கள் தங்களது உடலில் மறைத்து வைத்திருந்தனர். 3.66 கிலோ தங்க பசையிலிருந்து 3.26 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு 1.65 கோடி.

மேலும் இவர்கள் 204 கிராம் எடையில், 6 தங்க துண்டுகளை, தங்கள் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்தனர். இவற்றின் மதிப்பு 10.3 லட்சம்.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தங்கத்தின் எடை 3.46 கிலோ. இவற்றின் மதிப்பு 1.75 கோடி. இவர்கள் கொண்டு வந்த பைகளை சோதனை செய்த போது, அதில் 75, குடாங் கரம் சிகரெட் பாக்கெட்டுகள், 14 பயன்படுத்தப்பட்ட லேப்டாப்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.2.5 லட்சம். 

இந்த பொருட்களை சட்டவிரோதமாக கடத்தி வந்த 5 பேரும் கைது செய்யப்பட்டதாக, சென்னை சர்வதேச விமானநிலைய சுங்க ஆணையர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

**********************

 



(Release ID: 1691903) Visitor Counter : 44


Read this release in: English