விவசாயத்துறை அமைச்சகம்
17,27,601 விவசாயிகளிடமிருந்து ரூ.24,803.63 கோடி மதிப்பிலான 84,80,544 பருத்தி கட்டுகள் கொள்முதல்
இடுகை இடப்பட்ட நாள்:
18 JAN 2021 6:48PM by PIB Chennai
இம்மாதம் 17ம் தேதி வரை, 17,27,601 விவசாயிகளிடமிருந்து ரூ.24,803.63 கோடி மதிப்பிலான 84,80,544 பருத்தி கட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம், பஞ்சாப் உட்பட பல மாநிலங்களில் நெல் கொள்முதல் சுமுகமாக நடக்கிறது. இம்மாதம் 17ம் தேதி வரை 565.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதேகால கொள்முதலைவிட 24.68 சதவீதம் அதிகம். 79.51 லட்சம் விவசாயிகள், ரூ.1,06,792.14 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்றுள்ளனர்.
மாநிலங்கள் வேண்டுகோள்படி 51.66 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 5089 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய், ரூ.52.40 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689746
**********************
(வெளியீட்டு அடையாள எண்: 1689800)
வருகையாளர் எண்ணிக்கை : 134