நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

நெல் கொள்முதல் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 26.48 சதவீதம் அதிகம்

இடுகை இடப்பட்ட நாள்: 13 JAN 2021 6:04PM by PIB Chennai

பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலங்கானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பிகார், சத்திஸ்கர், கேரளா, மேற்கு வங்கம், அசாம், கர்நாடகா மற்றும் ஜார்கண்டில் நெல் கொள்முதல் சுமுகமாக நடந்து வருகிறது.

இங்கு 2021 ஜனவரி 12 வரை 545.67 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் செய்யப்பட்ட 431.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலோடு ஒப்பிடும் போது இது 26.48 சதவீதம் அதிகமாகும்..

மேலும், மாநிலங்கள் வேண்டுகோள்படி, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 51.66 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

2021 ஜனவரி 12 வரை, 17,17,886 விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் ரூ 24648.50 கோடி மதிப்புள்ள 84,27,125 பருத்தி பேல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

 

2021 ஜனவரி 12 வரை, 289998.31 மெட்ரிக் டன் பாசிப்பருப்பு, உளுந்து வேர்க்கடலை மற்றும் சோயாபீன் ஆகியவற்றை ரூபாய் 1551.68 கோடிக்கு தனது முகமைகள் மூலம் அரசு கொள்முதல் செய்துள்ள காரணத்தினால், தமிழ்நாடு ஹரியானா குஜராத் மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் உள்ள 1,54,238 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

-----

(Release ID: 1688314)

 


(வெளியீட்டு அடையாள எண்: 1688379) வருகையாளர் எண்ணிக்கை : 122
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi