சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொரோனா தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கு நிபுணர் குழு பரிந்துரை
प्रविष्टि तिथि:
02 JAN 2021 7:22PM by PIB Chennai
2021 ஜனவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடைபெற்ற மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் துறை ரீதியான நிபுணர் குழு கூட்டத்தில், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு தலைமையகத்துக்கு கீழ்கண்ட பரிந்துரைகளை அளிக்க முடிவு எடுக்கப்பட்டது.
1) பல்வேறு ஒழுங்குமுறை நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்திய சீரம் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதித்தல்.
2) பொதுமக்களின் நலன் கருதி, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு, புதிய வகை தொற்றை கருத்தில் கொண்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை சோதனை அடிப்படையில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதித்தல்.
3) மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்த கேடிலா ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்துக்கு அனுமதி அளித்தல்.
------
(रिलीज़ आईडी: 1685694)
आगंतुक पटल : 274