விவசாயத்துறை அமைச்சகம்

கரீப் நெல் கொள்முதல் அதிகரிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 24 DEC 2020 6:15PM by PIB Chennai

கரீப் பருவ நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட 23.67 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழகம், பஞ்சாப் உட்பட பல மாநிலங்களில் கரீப் பருவ நெல் கொள்முதல் தொடர்ந்து நடக்கிறது. கடந்த 23ஆம் தேதி வரை 436.20 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே கால கொள்முதலை விடவும் 23.67 சதவீதம் அதிகம். இதற்காக 52.74 லட்சம் விவசாயிகள் ரூ.82,356.16 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்றுள்ளனர்.

மேலும், 51.66 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் தேதி வரை 2,23,594.64 மெட்ரிக் டன் பாசிப் பயறு, உளுந்து, நிலக்கடலை ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்துள்ளது. 65,10,294 பருத்திக் கட்டுகளையும் ரூ.19,048.87 கோடிக்கு அரசு கொள் முதல் செய்துள்ளது.

 மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்புகளைப் படிக்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683375

                                                                     -----


(வெளியீட்டு அடையாள எண்: 1683457) வருகையாளர் எண்ணிக்கை : 126
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi