சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

ரூபாய் 34.11 இலட்சம் மதிப்புள்ள தங்கம், சிகரெட்டுகள், ஆளில்லா குட்டி விமானம் ஆகியவை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

Posted On: 17 DEC 2020 5:48PM by PIB Chennai

ஃபிளை துபாய் எஃப் இசட் 8517 விமானம் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய திருச்சியைச் சேர்ந்த அப்துல் சலீம், 61, மற்றும் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த காதர் மீரான், 45, ஆகியோர் விமானம் மூலம் தங்கம் கடத்தி வருவதாகக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் வெளியே செல்லும் வழியில் சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இவர்களை சோதனையிட்ட போது, 152 கிராம் எடையுள்ள ரூபாய் 7.7 இலட்சம் மதிப்புள்ள இரண்டு தங்கச் சங்கிலிகள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் கொண்டு வந்த பையை சோதனையிட்ட போது, 235 கிராம் எடையுள்ள ரூபாய் 12 இலட்சம் மதிப்புள்ள தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில், ஏர் இந்தியா விமானம் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய சென்னையைச் சேர்ந்த ஜலாலுல்லா, 46, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் வெளியே செல்லும் வழியில் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரை சோதனையிட்ட போது, 280 கிராம் எடையுள்ள ரூபாய் 14 இலட்சம் மதிப்புள்ள ஐந்து தங்கத் துண்டுகள் கைப்பற்றப்பட்டன. அவர் கொண்டு வந்த பையை சோதனையிட்ட போது, ரூபாய் 1.30 இலட்சம் மதிப்புடைய 50 சிகரெட் பெட்டிகள் மற்றும் ஒரு குட்டி விமானம் ஆகியவை சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.

ரூபாய் 34.11 இலட்சம் மதிப்புள்ள 667 கிராம் தங்கம், ரூபாய் 1.30 இலட்சம் மதிப்புடைய சிகரெட்டுகள் மற்றும் ஆளில்லா குட்டி விமானம் என மொத்தம் ரூபாய் 35.41 இலட்சம் மதிப்புடைய பொருள்கள் சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

**********************



(Release ID: 1681521) Visitor Counter : 37


Read this release in: English , Tamil