நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
காரீப் நெல் கொள்முதல் 315.87 லட்சம் மெட்ரிக் டன்
प्रविष्टि तिथि:
29 NOV 2020 6:38PM by PIB Chennai
நடப்பு காரீப் பருவத்தில் கடந்த 28ம் தேதி வரை 315.87 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நெல் கொள்முதல் சுமூகமாக நடக்கிறது. கடந்த 28ம் தேதி வரை 315.87 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் 266.19 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
இதன் மூலம் 29.37 லட்சம் விவசாயிகள் ரூ.59.636.82 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்றுள்ளனர்.
மாநிலங்கள் வேண்டுகோள் அடிப்படையில் 45.24 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677016
*******************
(रिलीज़ आईडी: 1677066)
आगंतुक पटल : 198