தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

அக்டோபர் மாதத்திற்கான, வேளாண் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் வெளியீடு

Posted On: 20 NOV 2020 4:52PM by PIB Chennai

வேளாண் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்கான, 2020 அக்டோபர் மாதத்திய அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (அடிப்படை:1986-87=100), 15 மற்றும் 14 புள்ளிகள் அதிகரித்து முறையே 1052 மற்றும் 1057 புள்ளிகளாக உள்ளது.

இந்தக் குறியீட்டெண்ணின் ஏற்ற இறக்கங்கள், மாநிலங்கள் தோறும் மாறுபடுகின்றன. தமிழ்நாடு, வேளாண் தொழிலாளர்களுக்கான குறியீட்டெண்ணில் 1242 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இமாச்சலப் பிரதேசம் 830 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

கிராமப்புற தொழிலாளர்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு 1226 புள்ளிகளுடன் குறியீட்டெண் பட்டியலில் முதலிடத்திலும், இமாசலப் பிரதேசம் 877 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674407

**********************



(Release ID: 1674544) Visitor Counter : 89


Read this release in: English , Urdu , Hindi