சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

தில்லி காவலர் தேர்வு 2020 குறித்த முக்கிய அறிவிப்பு

Posted On: 18 NOV 2020 6:08PM by PIB Chennai

பணியாளர் தேர்வாணையம், ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான (நிர்வாகம்) தில்லி காவல் தேர்வு 2020-ஐ கணினி வழியாக நடத்த உள்ளது. தேர்வுக்கு நான்கு நாட்கள் முன்பிலிருந்து இதற்கான மின் அனுமதி சான்றிதழை பணியாளர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து விண்ணப்பதாரர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த தகவல்கள் விண்ணப்பதாரர் அளித்துள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கப்படும்.

தென்னிந்தியாவில் இந்தத் தேர்வு, 27.11.2020, 01.12.2020, 02.12.2020, 03.12.2020, 07.12.2020, 08.12.2020 மற்றும் 09.12.2020 ஆகிய நாட்களில் நடைபெறும்.

தென்னிந்தியாவில் 136352 பேர் இந்த தேர்விற்கு விண்ணப்பித்து உள்ளார்கள். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், ஆந்திரப் பிரதேசத்தில் சிராலா, குண்டூர், காக்கிநாடா, குர்னூல், நெல்லூர், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் விஜய நகரிலும், தெலங்கானாவில் ஹைதராபாத், கரீம் நகர், மற்றும் வாரங்கல்லிலுமாக மொத்தம் 20 நகரங்களில் 32 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.

நாள் ஒன்றுக்கு மொத்தம் மூன்று கட்டங்களாக இந்த தேர்வு நடைபெறும். முதற்கட்டமாக காலை 9 மணிமுதல் 10.30 மணி வரையும் அதைத் தொடர்ந்து மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரையும், இறுதியாக மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும்.

கைக்கடிகாரம், புத்தகங்கள், துண்டுச்சீட்டு, சஞ்சிகைகள், செல்பேசி ப்ளூடூத் சாதனங்கள், ஹெட்போன்கள் சிறிய அளவிலான கேமராக்கள், ஸ்கேனர்கள், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவைகளை தேர்வு மையத்திற்குள் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் மின் அனுமதி சான்றிதழ் மற்றும் அசல் அடையாள அட்டைகளை விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தேர்வு மையத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு தெற்குப் பிராந்திய உதவி எண்களான 044-28251139, 9445195946 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

கொவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பான வகையில் தேர்வுகள் நடைபெற பணியாளர் தேர்வாணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

இந்தத் தகவல் சென்னை தெற்குப் பிராந்திய பணியாளர் தேர்வாணையத்தின் இணைச் செயலாளர் மற்றும் பிராந்திய இயக்குநர் திரு கே நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**********************

 

 



(Release ID: 1673857) Visitor Counter : 58


Read this release in: English