சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

கோயம்புத்தூர் வேளாண் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளுக்கு தேசிய தண்ணீர் விருது

Posted On: 13 NOV 2020 2:34PM by PIB Chennai

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு-கரும்பு இனப்பெருக்க நிறுவனம், கோயம்புத்தூரை சேர்ந்த விஞ்ஞானிகள் தேசிய தண்ணீர் விருதுகள்-2019-இல் முதல் பரிசை வென்றிருக்கிறார்கள்.

"மண் ஈரப்பதக் காட்டி மற்றும் நீர்ப்பாசன நீர் மேலாண்மையில் அதன் செயல்பாடு" என்னும் தலைப்பிலான பணிக்காக டாக்டர் கே ஹரி, டாக்டர் டி புத்திர பிரதாப், டாக்டர் பி முரளி, டாக்டர் ஏ ரமேஷ் சுந்தர் மற்றும் டாக்டர் பி சிங்காரவேலு ஆகியோர் இந்த பரிசை பெற்றிருக்கிறார்கள்.

இந்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளங்கள், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்கத் துறையால் 'சிறந்த ஆராய்ச்சி/புதுமை/நீர் சேமிப்பில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்' என்னும் பிரிவில் இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் மற்றும் இணை அமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா ஆகியோர் முன்னிலையில், 2020 நவம்பர் 11-12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவை குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி இணையம் மூலம் ஒளிபரப்பப்பட்டது.

ரூபாய் இரண்டு லட்சம் ரொக்கப் பரிசையும், பட்டயம் ஒன்றையும் தங்களது பணிக்காக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு-கரும்பு இனப்பெருக்க நிறுவனம், கோயம்புத்தூரை சேர்ந்த விஞ்ஞானிகள் பெற்றிருக்கிறார்கள்.

இந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள மண் ஈரப்பதக் காட்டி (Soil

Moisture Indicator - SMI), என்னும் பயனருக்கு நட்பான, எளிய உபகரணம், நீர்ப்பாசனத்தை திட்டமிடும் போது ஈரப்பதத்தை மதிப்பிடுவதில் விவசாயிகளுக்கு உதவும். இதன் மூலம் குறிப்பிட்ட அளவு தண்ணீரை சேமிக்க முடியும்.

கண்டுபிடிப்பிற்காகவும், விருது வென்றதற்காகவும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு-கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் இயக்குநர் திரு பக்ஷி ராம்  விஞ்ஞானிகளைப் பாராட்டினார்.

இது குறித்த மேலும் விவரங்களை கீழ்கண்ட இணைப்புகளில் பெறலாம்:

https://sugarcane.icar.gov.in/index.php/en/home/1157-soil-moisture-indicator

https://caneinfo.icar.gov.in/Gallery/SMI%20web%20bulletin%20for%20CaneInfo.pdf

**********************

 


(Release ID: 1672657) Visitor Counter : 119


Read this release in: English