சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

மின்விநியோகத்தை விரைவாக மீட்டெடுக்கும் புதிய முறை - சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி சென்னை முன்னெடுப்பு

Posted On: 13 NOV 2020 2:28PM by PIB Chennai

பேரிடர் காலங்களில் துண்டிக்கப்பட்ட மின் சேவையை விரைவாக மீட்டெடுக்கும் வகையிலான உள்நாட்டு அவசரகால மீட்டெடுப்பு முறையை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலின் அங்கமான கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் உருவாக்கி உள்ளது.

மின்கோபுரத்தில் உள்ள மின் பரிமாற்றத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் சமயங்களில் விரைவாக இந்த முறை மின்சாரத்தை மீட்டெடுக்கும். அவசரகால மீட்டெடுப்பு முறையான(இஆர்எஸ்) இது உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இஆர்எஸ் முறைக்கு லைசென்ஸ் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் அகமதாபாத்தில் உள்ள அத்வைத் இன்ஃபராடெக் நிறுவனத்துடன்  சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி கையெழுத்திட்டுள்ளது. சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி சென்னையின் இயக்குநர் பேராசிரியர் திரு.சந்தோஷ் கபூரியா, புதுதில்லியில் உள்ள மத்திய மின்சார அத்தாரிட்டியின் தலைமை பொறியாளர்(பிஎஸ்இ&டிடி) எஸ்.கே.ரே மொகாபத்ரா ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

மனிதர்களால் ஏற்படும் இடையூறுகள் அல்லது பூகம்பம்/புயல் போன்ற இயற்கை பேரழிவுகளின் போது மின்கோபுரத்தின் மின்பரிமாற்றம் பாதிக்கப்படும்போது உடனே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அந்த சமயங்களில் எடைக்குறைவான இந்த மாதிரி இஆர்எஸ் முறையானது தற்காலிக ஆதரவாக உபயோகிக்கப்படும். இந்த இஆர்எஸ் முறையை பேரழிவு ஏற்பட்ட இடங்களில் எளிதாக கட்டமைக்கமுடியும். நிரந்தரமாக மின்வசதி மீட்டெடுக்கப்படுவதற்கு பல வாரங்கள் ஆகும் நிலையில், இந்த முறையின் வாயிலாக  2-3 நாட்களில் மீண்டும் மின் வசதியை அளிக்க முடியும். மின்பரிமாற்றம் துண்டிக்கப்படும்போது பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், மின் நிறுவனங்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. அத்தகைய சமயங்களில் இந்த முன்னெடுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சேதம் அடைந்த /கீழே விழுந்த கட்டமைப்புகளை மீட்டெடுப்பது அல்லது மீண்டும் நிலை நிறுத்துவத்துதவற்கான நேரம், செயலிழப்பு காலம் மொத்த இழப்புகள்/சேதங்களின் நேரடியான விகிதாசாரத்தின் முக்கியமான அம்சமாக இருக்கின்றன. ஏற்கனவே இது போன்ற முறைகள் உலக சந்தையில் இருந்தபோதிலும், இது போன்ற தொழில்நுட்ப முன்னெடுப்பு இந்தியாவில் முதன்முறையாகும். இது இறக்குமதிக்கு மாற்றாகும். தவிர இறக்குமதி செய்யட்ட முறைகளைக் காட்டிலும்  40 % அளவுக்கு மட்டுமே இதற்கு செலவாகும்.

 கட்டமைப்பு ரீதியாக இது எளிதில் இணைக்கப்படக்கூடிய வடிவமைப்பை கொண்டது, எடை குறைவானது மீண்டும் மீண்டும் உகந்தது.. தீவிரமான கட்டமைப்பு பரிசோதனைகளில் இந்த முறை சரிபார்க்கப்பட்டது. பேரழிவு இடங்களில் இஆர்எஸ் கருவியை நிறுவுவதற்கு அடிப்படையான அறிவும், கருவிகள் மட்டுமே போதுமானதாகும். வெவ்வேறு மின்னழுத்த பிரிவு மின்பரிமாற்ற லைன் சாத்திய முறைகளுக்கு பொருத்தமான உள்ளமைவுகள் ஆகும். இது கச்சிதமான முறை, கட்டமைப்பில் இன்னும் முழு செயல்பாட்டை வழங்குகிறது. இது 33 முதல் 800 கிலோவோல்ட் பிரிவு மின்சார லைன்களுக்கான அளவான முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பேரழிவை தடுக்கும் சமூகத்தை உருவாக்க உதவுகிறது. இஆர்எஸ் முறைக்கு இந்தியாவில் பெரும் சந்தை இருக்கிறது. அதே போல சார்க் நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலும் பெரும் சந்தை இருக்கிறது. எனவே, இந்தியாவில் உருவாக்குவோம் மற்றும் ஆத்ம நிர்பார் பாரத் ஆகியவற்றை நோக்கி முன்னெடுப்பதற்கான இது  தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு பெரிய பாய்ச்சலாகும்.

இஆர்எஸ் முறைக்கு லைசென்ஸ் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் அகமதாபாத்தில் உள்ள அத்வைத் இன்ஃபராடெக் நிறுவனத்துடன்  சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி கையெழுத்திட்டுள்ளது. சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி சென்னையின் இயக்குநர் பேராசிரியர் திரு.சந்தோஷ் கபூரியா, புதுதில்லியில் உள்ள மத்திய மின்சார அத்தாரிட்டியின் தலைமை பொறியாளர்(பிஎஸ்இ&டிடி) எஸ்.கே.ரே மோகபத்ரா ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

**********************

 



(Release ID: 1672646) Visitor Counter : 43


Read this release in: English