குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவரின் மிலாது நபி வாழ்த்துச் செய்தி
प्रविष्टि तिथि:
29 OCT 2020 4:36PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் விடுத்துள்ள மிலாது நபி வாழ்த்துச் செய்தியில், "முகமது நபியின் பிறந்தநாளான மிலாது நபியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முகமது நபி, அன்பு மற்றும் சகோதரத்துவத்தை மனிதநேயத்தை நோக்கிய பயணத்தில் முன்னெடுத்துச் சென்றார். சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்துடன் கூடிய சமூகத்தை உருவாக்க அவர் விரும்பினார்.
புனித குரானில் குறிப்பிடப்பட்டுள்ள முகமது நபியின் போதனைகளைப் பின்பற்றி சமூகத்தின் நலனுக்காகவும், நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கம் பெருகவும் நாம் அனைவரும் செயல்படுவோம்" என்று குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
**********************
(रिलीज़ आईडी: 1668625)
आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English