சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
எப்ஏஎம்இ இந்தியா திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொது போக்குவரத்து முறை என்னும் தொலைநோக்கை எட்டும் இத்திட்டத்தின் கீழ் திருச்சிக்கு 25 மின்-பேருந்து மின்னூட்ட நிலையங்கள் ஒதுக்கீடு
प्रविष्टि तिथि:
28 SEP 2020 4:21PM by PIB Chennai
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொது போக்குவரத்து என்னும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கை நனவாக்கும் ம் வகையில், மத்திய அரசு, பாஸ்டர் அடாப்சன் அன்ட் மனுபாக்சரிங் ஆப் ஹைபிரிட் எலக்டிரிக் வெகிகிள்ஸ் ( எப்ஏஎம்இ) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், திருச்சியில், 25 மின்சாரப் பேருந்துகளுக்கான மின்னூட்ட நிலையங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா, கோவா, குஜராத், சண்டிகார் ஆகிய மாநிலங்களில் 670 மின்சார பேருந்துகளுக்கு மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம், மத்தியப் பிரதேசம், கேரளா, குஜராத், போர்ட்பிளேர் ஆகிய இடங்களில் எப்ஏஎம்இ திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ், 241 மின்னூட்ட நிலையங்களை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கோவா, மகாராஷ்டிரா, நவி மும்பை, ராஜ்கோட், ஆகியவற்றுக்கு தலா 100 மின் பேருந்துகளும், சூரத்திற்கு 150 பேருந்துகளும், சண்டிகருக்கு 80 பேருந்துகளும், பெஸ்ட் மும்பைக்கு 40 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, கனரகத் தொழில் துறை 64 நகரங்களுக்கு 5595 மின் பேருந்துகளை ஒதுக்கி அனுமதி வழங்கியது. இதில், திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு தலா 100 மின் பேருந்துகளும், ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர் ஆகிய நகரங்களுக்கு தலா 50 பேருந்துகளும், தஞ்சைக்கு 25 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டதும் அடக்கம்.
மின்சாரப் பேருந்துகளை ஊக்குவிக்கும் வகையில், கனரகத் தொழில் துறை, இந்த எப்ஏஎம்இ திட்டத்தை 2015 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தி வருகிறது. முதல் கட்ட திட்டம் 2019 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. 2019 ஏப்ரல் 1 முதல் மூன்றாண்டுகளுக்கு திட்டத்தின் இரண்டாவது கட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 10,000 கோடி. திட்டத்தின் இந்தக் கட்டம் 7000 மின் பேருந்துகள், 5 லட்சம் மின் மூன்று சக்கர வாகனங்கள், 55000 மின் நான்கு சக்கர பயணிகள் வாகனங்கள், 10 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. திட்டத்தின் முதல் கட்டத்தில், 2.8 லட்சம் துரித மின்சார வாகனங்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.359 கோடி வழங்கப்பட்டது. கனரக தொழில் துறை, நாடு முழுவதும், பல்வேறு நகரங்களுக்கான 425 மின்சார பேருந்துகளுக்கு ரூ. 300 கோடி மதிப்பில் அனுமதி வழங்கியது. நாடு முழுவதும் ஏற்கனவே, 30,000 மின்சார வாகனங்கள் விற்பனை ஆகியிருப்பதாக தேசிய ஆட்டோமோடிவ் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களைப் பயன்படுத்துவதால், 87.8 லட்சம் லிட்டர் எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளது. சுமார் 74,000 கிலோ கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 4,000 மின்சார இருசக்கர வாகனங்கள் உள்பட 4049 மின்சார வாகனங்களை வாங்கி தமிழகம் மாநிலங்களிலேயே முதலிடத்தில் உள்ளது.
ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்த திருமதி சுஜாதா, மின்சாரப் பேருந்துகள் நிச்சயமாக திருச்சி நகரில் காற்று மாசை வெகுவாகக் குறைக்கும் என்று கூறினார். குளிர் காலங்களில், ஶ்ரீரங்கத்தை திருச்சியுடன் இணைக்கும் காவிரி பாலம் பனிப்படலத்தால் சூழப்பட்டிருக்கும். இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். மேலும், மேலும் மின்சார பொது போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்பட்டால், கார்பன்டை ஆக்சைடு உமிழ்வையும், புகையையும் வெகுவாகக் குறைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்கள் நிச்சயமாக கார்பன் உமிழ்வைக் குறைத்து நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் பதிலாக, கூடுதலாக மின்சார வாகனங்கள் குறிப்பாக இருசக்கர வாகனங்கள் இயக்கப்படுவதன் மூலம், எப்ஏஎம்இ இந்தியா திட்டம், காற்று மாசைக் குறைக்க பெரிதும் உதவும்
***********************


(रिलीज़ आईडी: 1659769)
आगंतुक पटल : 83
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English