சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

ஊட்டச்சத்து காய்கறிகளையும் பழங்களையும் முறையாகப் பெறுவதற்கு ஒவ்வொரு வீட்டின் பின்தளத்திலும் சமையலுக்கான தோட்டத்தை அமைக்க மத்திய அரசு வலியுறுத்துகிறது. செப்டம்பர் மாதம் ஊட்ட சத்து மாதமாக அனுசரிக்கப்படுகிறது

Posted On: 26 SEP 2020 6:45PM by PIB Chennai

கே. தேவி பத்மநாபன் – கள விளம்பர அலுவலர், திருச்சிராப்பள்ளி

கொவிட் 19 தொற்றுநோயால் ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டிய கட்டாய சூழலில், பொருட்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. உள்நாட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. பிரதம மந்திரி 'உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்” என அழைப்பு விடுத்ததுடன், ”சுயசார்ப்பு பாரதம்” திட்டத்தின் கீழ் பல்வேறு முயற்சிகளுடன் தன்னம்பிக்கை பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம், ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்படுகிறது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள - SAM குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு கூடுதல் சத்தான உணவை அளிக்க, ஊட்டச்சத்து - தோட்டங்கள் / சமையலறை தோட்டங்களை அமைப்பதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள். உலக சுகாதார அமைப்பு- WHO தரத்தின்படி, கடுமையான ஊட்டசத்து குறைபாடு கொண்ட (SAM) குழந்தைகளின் எடை-உயர  விகித வித்தியாசம் 3-க்கும் குறைவாக இருக்கும். 

போஷன் மா - ஊட்டச்சத்து மாதத்தில், அங்கன்வாடி தொழிலாளர்களால் சிறப்பு செயலி மூலம் கடுமையான ஊட்டசத்து குறைபாடுடைய குழந்தைகள் அடையாளம் காணப்படுகிறார்கள். ஒட்டுமொத்த கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு / SAM நிர்வாகத்தை உள்ளடக்கிய அங்கன்வாடி தொழிலாளர்களுக்கான விரிவான திறன் மேம்பாட்டு செயலிகள்யக்கப்படும். விழிப்புணர்வு உருவாக்கப்பட்டு, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள / SAM குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண சமூக அடிப்படையிலான உணர்திறன் மேற்கொள்ளப்படுகிறது. அதனால்தான் ஊட்டசத்து குறைபாடுடைய  குழந்தைகளை அடையாளம் காண்பதுடன், வீட்டு கொல்லைப்புறம், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் சமூக மட்டத்திலும் சத்தான சமையலறை தோட்டங்களை அமைக்க ஊக்குவிக்கப்படுகிறது.

ஆரோக்கியமான குழந்தைக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து பெண்கள் மத்தியில், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு உருவாக்கப்படுகிறது. அரியலூரில், ஊட்டச்சத்து மாத கண்காட்சியைத் திறந்து வைக்கும் போது மாவட்ட ஆட்சியர் திருமதி டி ரத்னா, கர்ப்பிணிப் பெண்கள் குறைந்தது 10 கிலோ எடை அதிகரிப்பதுடன், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்க நல்ல சத்தான உணவை உட்கொள்வதன் அவசியம் குறித்து பேசினார். அரியலூர் மாவட்டத்தின் ஆறு தொகுதிகளில் 774 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களைச் சேர்ந்த அங்கன்வாடி தொழிலாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள கர்ப்பிணிப் பெண்களிடையே ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். ஊட்டச்சத்து விழிப்புணர்வு திட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு சமையலறை தோட்டம் அமைக்க கத்திரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், பட்டாணி, சுரைக்காய் விதைகள் மற்றும் கரிம உரம் ஆகியவழங்கப்பட்டன. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ICDS) திட்டத்தின், திருச்சி அதிகாரிகள் வீட்டின் கொல்லைப்புறங்களில் ஊட்டச்சத்து / சமையலறை தோட்டங்களை அமைக்க ஊக்குவிப்பதாக திட்ட அலுவலர் திருமதி டி புவனேஸ்வரி தெரிவித்தார். திருச்சியில் 1850 அங்கன்வாடி மையங்கள் உள்ளன என்று அவர் கூறினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ICDS) திட் தொழிலாளர்களின் உதவியுடன் வீடுகளில் 1314 க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்து தோட்டங்களும், அங்கன்வாடி மையங்களில் 735 ஊட்டச்சத்து தோட்டங்களும், சமூக மட்டத்தில் 155 ஊட்டச்சத்து தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

மொட்டை மாடி தோட்டம் மற்றும் கொல்லைப்புறத்தில் பல வகையான காய்கறிகளை பயிரிட்டு வளர்த்து வருவதாக திருமதி பத்மஸ்ரீ கூறினார். அவர் சுரைக்காய், சுண்டைக்காய், புடலங்காய், கத்திரிக்காய், பீன்ஸ், சாலட் வெள்ளரி, காலிஃபிளவர், வெண்டைக்காய், பாகற்காய், பச்சை மிளகாய், பட்டாணி, தக்காளி ஆகியவற்றை வளர்த்து வருவதாக தெரிவித்தார். மாட்டு சாணம் உள்ளிட்ட கரிம உரம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தொற்றுநோய் காரணமாக ஊரடங்க்கு அமல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில் உள்நாட்டில் வளர்க்கப்படும் முருங்கை கீரை, பசலைக்கீரை - கீரை உள்ளிட்ட காய்கறிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன என்று அவர் கூறினார். மேலும் அவர், இது வீட்டில் வளர்க்கப்படும் காய்கறிகள் மூலம் எளிதில் கிடைக்கும் சத்தான உணவை உறுதி செய்கிறது, என்று கூறினார். ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் வீட்டில் இருப்பதால் தோட்டக்கலைகளிலும் ஈடுபடுகிறார்கள்.

தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு சுய-நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஊட்டச்சத்து முக்கியமானது. ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு தேவை. சமையலறை தோட்டங்கள் அனைவருக்கும் மலிவு விலையில் சத்தான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய உதவும், மேலும் மக்கள் எந்தவொரு நோய் தொற்றையும் எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள், அதே நேரத்தில் தன்னிறைவு வளரும்.

 

 



(Release ID: 1659386) Visitor Counter : 373


Read this release in: English