சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
டாக்டர் சேகர் பாசுவின் மறைவுக்கு அணுசக்தி துறை இரங்கல்
प्रविष्टि तिथि:
24 SEP 2020 6:28PM by PIB Chennai
2020 செப்டம்பர் 24 அன்று காலை கொல்கத்தாவில் அகால மரணமடைந்த டாக்டர் சேகர் பாசுவுக்கு அணுசக்தி துறை அஞ்சலி செலுத்தியுள்ளது.
அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும் இந்திய அரசின் அணுசக்தி துறையின் செயலாளராகவும் 2015 அக்டோபர் 23 முதல் 2018 செப்டம்பர் 17 வரை டாக்டர் சேகர் பாசு பணியாற்றியுள்ளார்.
அணுசக்தித் துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள அவர், மகாராஷ்டிராவில் உள்ள தாராப்பூரிலும், தமிழ்நாட்டில் உள்ள கல்பாக்கத்திலும் அணு மறுசுழற்சி வசதிகளின் வடிவமைப்பு, வளர்ச்சி, கட்டுமானம் மற்றும் செயல்பாட்டில் முக்கிய பங்கை ஆற்றினார்.
இந்திய அணுசக்தி திட்டங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்த தொழில்நுட்ப மேம்பாடுகளில் அவருக்கு மாபெரும் பங்குண்டு.
கல்பாக்கத்தில் 18 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்த டாக்டர் சேகர் பாசுவுக்கு இந்த இடத்தின் மேல் அதிக பற்று உண்டு.
கல்பாக்கத்துக்கு அருகிலுள்ள வயலூரில் தடுப்பணை கட்டுவதற்கு அனுமதி அளித்ததன் பின்னணியில் அவர் இருந்தார். இதன்மூலம் அந்த பகுதியில் நிலத்தடி நீரின் அளவு அதிகரித்ததோடு விவசாயத்துக்கும் நன்மை விளைந்தது.
எட்டு பல்கலைக்கழகங்கள் அவருக்கு முனைவர் பட்டம் அளித்தன. 2014-இல் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை அளித்துக் கௌரவித்தது.
உண்மையான லட்சியவாதி, திறன் படைத்த தொழில்நுட்ப நிபுணர் மற்றும் மாபெரும் அணுசக்தி விஞ்ஞானியான அவரது மறைவு நாட்டுக்கும் அணுசக்தித் துறைக்கும் பேரிழப்பாகும்.
*

(रिलीज़ आईडी: 1658750)
आगंतुक पटल : 113
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English