சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் உதவுகிறது

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தின் கீழ் 2 லட்சம் திட்டங்களுக்கு ரூபாய் 5,634 கோடி வழங்கப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2020 5:39PM by PIB Chennai

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்துக்கு புத்தாக்கம் அளிப்பதற்கும், எதிர்த்துப் போராடுவதற்கும், கொவிட்-19 பெருந்தொற்று ஊரடங்கு தளர்வு-4 காலகட்டம் வழிவகுக்கிறது. கொவிட்-19 பொது முடக்கத்தால் தினக்கூலி பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர், வியாபாரிகள் தொழிலை இழந்துள்ளனர், மக்களின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்திற்கு புத்தாக்கம் அளிப்பதற்கும், பாதிக்கப்பட்ட நபர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதற்கும் ரூபாய் 20 லட்சம் கோடி மதிப்புள்ள தற்சார்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தற்சார்பாக இருத்தல் என்பது நமது பிரதமரின் அறைகூவலாக இருக்கும் நிலையில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் போன்ற திட்டங்கள் சரியாக பயன்படுத்தப்பட வேண்டும்.

 

திருச்சிராப்பள்ளி மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் திரு ரவீந்திரன் கூறுகையில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தின் தேசிய செயல்படுத்தும் முகமையான காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றும் மாநில அளவில் மாநில காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியங்கள் மற்றும் மாவட்ட தொழில் மையங்கள் ஆகியவற்றால் செயல்படுத்தக் கூறினார். மாவட்ட தொழில் மைய அலுவலகங்கள் மற்றும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் இணையதளம் ஆகியவற்றின் மூலம் கடன்களுக்காக விண்ணப்பிக்கலாம் என்றும் பயிற்சிக்கான விலக்கு இந்த மாத இறுதி வரை அளிக்கப் படுவதாகவும் அவர் கூறினார். www.kviconline.gov.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பத்தை பயனாளிகள் சமர்ப்பித்து, அதனை பிரிண்ட் அவுட் எடுத்து விரிவான திட்ட அறிக்கை மற்றும் தேவையான இதர ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தின் கீழ் இதுவரை 16.82 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நாடு முழுவதிலும் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட 2 லட்சம் திட்டங்களுக்கு ரூபாய் 5,634 கோடி வழங்கப்பட்டுள்ளது.

 

கொவிட்-19 பெருந்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, ஆரம்ப பணத்தை பெறுவதற்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியை பெறுவதிலிருந்து செப்டம்பர் 30 வரை மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் விலக்களித்துள்ளது. ஆனால், 2020 டிசம்பர் 31 வரையிலான அடுத்த காலாண்டில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியைப் பெற வேண்டும். பொதுவாக, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தின் இணையதளத்தின் மூலம் பணத்தை பெறுவதற்கு, ரூபாய் 5 லட்சத்துக்கு அதிகமான திட்ட மதிப்புக்கு 10 நாட்கள் பயிற்சியும், ரூபாய் 5 லட்சம் வரையிலான திட்ட மதிப்புக்கு ஆறு நாட்கள் பயிற்சியும் கட்டாயமாகும்.

 

உற்பத்தித் துறையில் அதிகபட்சம் 25 லட்சம் வரையிலும் தொழில் மற்றும் சேவைத் துறையில் ரூபாய் 10 லட்சம் வரையிலும் திட்ட மதிப்பு அனுமதிக்கப்படுகிறது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவில் நகர்புற திட்டங்களுக்கு 15 சதவீத மானியமும், கிராமப்புற திட்டங்களுக்கு 25 சதவீத மானியமும், சிறப்புப்பிரிவில் நகர்புற திட்டங்களுக்கு 25 சதவீத மானியமும், கிராமப்புற திட்டங்களுக்கு 35 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், வடகிழக்குப் பகுதியினர், மலை மற்றும் எல்லைப் பகுதிகளில் வசிப்பவர்கள் ஆகியோர் சிறப்பு பிரிவில் வருவார்கள். மொத்த திட்ட மதிப்பில் மீதித் தொகை காலமுறை கடனாகவோ அல்லது பணி மூலதனமாகவோ வங்கிகளால் வழங்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கும் எந்த ஒரு தனிநபரும் உற்பத்தி துறையில் ரூபாய் 10 லட்சத்துக்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் ரூ 5 லட்சத்துக்கு மேற்பட்ட திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். புதிய திட்டங்கள் மட்டுமே பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்படும். சுய உதவி குழுக்கள், சொசைட்டி பதிவுச்சட்டம் 1860-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள், உற்பத்தி கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியோரும் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

 

தங்களது சொந்தக் கால்களில் நிற்பதற்கும் பாதுகாப்பான வாழ்வாதாரத்தை அடைவதற்கும், தற்சார்பு இந்தியா இலக்கை எட்டுவதற்கும் அரசு திட்டங்களை வேலையில்லா இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

 

திருச்சிராப்பள்ளி மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர்
திரு ரவீந்திரன்


 


(வெளியீட்டு அடையாள எண்: 1656285) வருகையாளர் எண்ணிக்கை : 175
இந்த வெளியீட்டை படிக்க: English