சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

கொரோனாவுக்கு இடையிலும் நேரடி வரிகள் தளத்தில் விரைவான நீதி வழங்க வரி தீர்ப்பாயம் புதுமையான, ஐடி தொழில்நுட்பங்களை தீவிரமாகப் பயன்படுத்துகிறது

Posted On: 17 SEP 2020 6:14PM by PIB Chennai

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பி.பி. பட் , பொது முடக்கம் நீக்கப்பட்ட உடன், நேரடியாக விசாரிப்பதற்கு பதிலாக,  காணொலி மூலம் விசாரணை நடைமுறைகளை தொடங்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு, வாதி மற்றும் பிரதிவாதிகள் தரப்பு தொலைதூரத்தில் இருந்தவாறு விசாரணைக்கு ஆஜராவதன் மூலம்  கிளைகள் இயங்குவதற்கு வழி ஏற்படுத்தும். ஏப்ரல் 2020 முதல் ஆகஸ்ட் 31 2020 முடிய, ஓரளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில், 5,392 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இதே காலத்தில் 3,078 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.



(Release ID: 1656055) Visitor Counter : 116


Read this release in: English , Hindi