குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

சேவா தினத்தை கொண்டாடும் வகையில் 10 நகரங்களில் 1500 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி உள்ளது, காதி கிராம தொழில் ஆணையம் (கே வி ஐ சி)

Posted On: 17 SEP 2020 6:37PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் பிறந்த நாளான வியாழக்கிழமைன்று சேவா தினத்தைக் கொண்டாடும் வகையில் இந்தியாவில் 10 நகரங்களில், ஏறத்தாழ 1500 பேருக்கு பல்வேறு வேலைவாய்ப்பு உருவாக்க திட்டங்களின் நன்மைகளை காதி கிராமப்புற தொழில் ஆணையம் (கே வி ஐ சி) வழங்கியுள்ளது.  வடகிழக்கு மண்டலத்தின் அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து, மேற்கு எல்லையில் பிகானேர் வரையிலும், வடக்கில் சண்டிகர் புதுதில்லி ஆகிய இடங்களிலிருந்து, தெற்கே மதுரை, கோயம்புத்தூர் வரையிலும் கே வி ஐ சி உள்ளூர் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நல்வாழ்வு திட்டங்களை விரிவாக்குவதற்கான 14 நிகழ்ச்சிகளை நடத்தியது..

 

உத்தரப்பிரதேசத்தில் பிரயாக்ராஜில் கைகளால் பின்னப்படும் கம்பளங்கள் தயாரிப்பதற்காக 500 கைவினைஞர்கள் கொண்ட எஸ் எப் யு ஆர் டி ஐ தொகுப்பு ஒன்றை, சிறு குறு நடுத்தரத் தொழில்களுக்கான மத்திய இணை அமைச்சர் திரு பிரதாப் சந்திர சாரங்கி துவக்கி வைத்தார். கைவினைஞர்களுக்கு அதிகாரம் வழங்கும் கேவிஐசியின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த திரு சாரங்கி, இது போன்ற முயற்சிகள் வளர்ந்து வரும் இந்தியாவின் கனவுகளை நனவாக்க உதவும் என்று கூறினார்.. இந்தியா சுயசார்பு இந்தியாவாக உருவாக்க காதி பெரும் பங்கு வகிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

உள்ளூர் கைவினைஞர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் ராஜஸ்தானில் உள்ள பிகானேர் மாவட்டத்தில் உள்ள கைவினைஞர்களுக்கும், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தை சேர்ந்த கைவினைஞர்களுக்கும் புதிய மாதிரியிலான குயவர் சக்கரத்தை கே வி ஐ சி தலைவர் வழங்கினார். இதேபோல் காதி கைவினைஞர் களுக்கு தங்கள் பொருட்களுக்கு மேலும் சிறந்த சந்தை வாய்ப்பு கிடைக்கச் செய்வதற்காக போபாலில் பர்கேடியிலும், தமிழ்நாட்டில் கோயம்புத்தூரிலும் 2 காதி விற்பனை மையங்களை கே வி ஐ சி தொடங்கியது.

 



(Release ID: 1655847) Visitor Counter : 115


Read this release in: English , Gujarati , Hindi