சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

அஞ்சல் துறையின் கோவிட் 19 ஸ்பெஷல் கவர் டிசைன் போட்டி

Posted On: 15 SEP 2020 2:45PM by PIB Chennai

பள்ளிக் குழந்தைகள் தபால்தலை சேகரிக்கும் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலமாக அறிவைப் பெருக்குவதே இந்திய அஞ்சல் துறையின் குறிக்கோளாக உள்ளது.  குழந்தைகளின்  வரைதல் திறனைத் தூண்டுவதற்கும், தபால் தலை பற்றி அறிந்து கொள்வதற்கும், சென்னை 600002 அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தின் சிறப்பு தபால்தலை மையம், கோவிட் 19 சம்பந்தமான சிறப்பு அட்டைகளை வடிவமைப்பதற்கான வரைதல் போட்டியை “கோவிட் 19 ஸ்பெஷல் கவர் டிசைன் போட்டி” என்னும் தலைப்பில் நடத்துகிறது.

 

தகுதி வரம்பு

 

  1. 8 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
  2. போட்டிக்கான நுழைவுக் கட்டணம் ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டுமே) அதனை அருகில் உள்ள தபால் நிலையத்திலிருந்து “Electronic Money Order” மூலம் “மேற்பார்வையாளர் (சிறப்பு தபால்தலை மையம்), அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், சென்னை 600002” என்ற முகவரிக்கு அல்லது காசோலையினை “தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், சென்னை 600002” என்ற பெயரில் அனுப்ப வேண்டும்.  நுழைவுக் கட்டணம் பெறுவதற்கான கடைசித் தேதி 30-09-2020 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தாமதமாக வரும் நுழைவுகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
  3. செலுத்தப்படும் நுழைவுக் கட்டணம் செலுத்துபவரின் பெயரில் புதிய தபால் தலை கணக்கில் வரவு வைக்கப்படும்.  புதிய நினைவு முத்திரைகள் (Commemorative Stamps) ரூ.200/-    வரை பங்கேற்பாளருக்கு அனுப்பப்படும்.  மேலும், குழந்தைகள் எதிர்காலத்தில் தங்கள் கணக்கில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
  4. பங்கேற்பாளர் ஏற்கனவே தபால்தலை டெபாசிட் கணக்கு வைத்திருந்தால், பங்கேற்பாளர் பெயர் மற்றும் கணக்கு எண்ணை “Electronic Money Order” செய்திப்பகுதியில் அல்லது காசோலையின் பின்புறம் குறிப்பிட வேண்டும்.  நுழைவுக் கட்டணமாக அனுப்பும் ரூ.200/- அந்த டெபாசிட் கணக்கில் ரீசார்ஜ் செய்யப்படும்.

 

வரைதலுக்கான தலைப்பு

 

  1. வரைதலுக்கான தலைப்பு – கோவிட் 19 (கோவிட் 19 – காரணங்கள், விளைவுகள், தடுப்பு போன்றவை) மற்றும் ஒவ்வொரு குழந்தையிடமிருந்தும் ஒரு வரைபடம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
  2. குழந்தைகள் தங்கள் வசதியான நேரத்தில் வரைபடத்தை வரைந்து “விரைவுத் தபால்” (Speed Post) மூலமாக மட்டும் “மேற்பார்வையாளர் (சிறப்பு தபால் தலை மையம்), அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், சென்னை 600002” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  வரைபடங்களைப் பெறுவதற்கான கடைசித் தேதி 30/09/2020 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தாமதமாக வரும் வரைபடங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
  3. குழந்தையின் பெயர், பள்ளியின் பெயர், வகுப்பு, வயது, வீட்டு முகவரி, கைபேசி எண் போன்ற விவரங்களை விரைவு தபால் உறை மற்றும் வரைபடத் தாள்களின் பின்புறம் பென்சிலில் மட்டுமே எழுத வேண்டும்.

 

தேர்வு செயல்முறை மற்றும் பரிசு விவரங்கள்

 

  1. போட்டி, இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும் – முதல் நிலை (வயது 8-10) மற்றும் இரண்டாம் நிலை (வயது 11-14),  ஒவ்வொரு வகையிலிருந்தும் முதல் மூன்று பேருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

பரிசு வகை

பரிசுத் தொகை

ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு

ரூ.2500/- (ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு மட்டும்)

ஒவ்வொரு பிரிவிலும் இரண்டாம் பரிசு

ரூ.1500/- (ரூபாய் ஆயிரத்து ஐநூறு மட்டும்)

ஒவ்வொரு பிரிவிலும் மூன்றாம் பரிசு

ரூ.1000/- (ரூபாய் ஆயிரம் மட்டும்)

 

  1. அஞ்சல் துறை மேற்கொண்ட தேர்வே இறுதியானது.
  2. தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களைத் தவிர மற்ற நபர்களுக்கு தகவல் அனுப்பப்படாது.
  3. தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் வரைபடங்கள் சிறப்பு அட்டைகளைத் தயாரிப்பதற்கான வடிவமைப்புகளாகப் பயன்படுத்தப்படும்.  இதனால் குழந்தைகள் இந்திய தபால் துறையின் வடிவமைப்பாளராகிறார்கள்.

 

அண்ணா சாலை தலைமை அஞ்சலக அதிகாரி திரு சு குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

----



(Release ID: 1654442) Visitor Counter : 116


Read this release in: English