சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லே-லடாக்கின் வளர்ச்சியை தடுத்த தேவைக்கதிமான சட்டங்களின் வேகத் தடைகளை சட்டப்பிரிவு 370-இன் நீக்கம் தகர்த்துள்ளது - முக்தர் அப்பாஸ் நக்வி
Posted On:
10 SEP 2020 5:52PM by PIB Chennai
லடாக்கில் உள்ள லேயில் இன்று பேசிய மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லே-லடாக்கின் வளர்ச்சியை தடுத்த தேவைக்கதிமான சட்டங்களின் வேகத் தடைகளை சட்டப்பிரிவு 370-இன் நீக்கம் தகர்த்துள்ளது என்று கூறினார்.
மத்திய அரசின் பல்வேறு சமூக-பொருளாதார-கல்வி அதிகாரமளிக்கும் திட்டங்களின் பலன்கள் தற்போது ஜம்மு-காஷ்மீர் மற்றும் லே-லடாக்குக்கும் கிடைப்பதாக திரு நக்வி தெரிவித்தார்.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள திரு நக்வி, பல்வேறு பொதுக்கூட்டங்களில் உரையாற்றியதோடு, இப்பகுதியில் உள்ள சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் உரையாடினார். யூனியன் பிரதேச அதிகாரிகளுடன் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
சட்டப்பிரிவு 370-இன் நீக்கம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லே-லடாக்கின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த அரசியல் மற்றும் சட்ட தடைக்கற்களை நீக்கியுள்ளதாகக் கூறிய அவர், நாட்டின் இதர பகுதிகளோடு இணைந்து இப்பிராந்தியமும் தற்போது வளர்ச்சியடைந்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https:/pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1653043
(Release ID: 1653117)