சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

டி ஜி சி - துணித்துறை பெரும் சவால் 2019

Posted On: 28 AUG 2020 11:09AM by PIB Chennai

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப்பைகள், பல முறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப்பைகள் ஆகியவற்றுக்கு மாற்றாக, உள்நாட்டிலேயே விளைவிக்கப்பட்ட இயற்கை  இழைளான சல், பருத்தி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கக்கூடிய மாற்றுப்பைகள் பற்றிய துணித்துறை பெரும் சவால் 2019”, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சணல் பிரிவு மூலம் மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் ஸ்டார்ட் அப் இந்தியா குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. “சுயசார்பு இந்தியா” “இந்தியாவில் உருவாக்குவோம் என்ற திட்டங்களின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, இந்த சவாலில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் விழா 27 ஆகஸ்ட் 2020 அன்று நடைபெற்றது.

 

ல் பயோ மாஸ்,ல் பசை அடிப்படையிலான பயோ பாலிமர், பருத்தி கழிவு நார்ப்பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி நெய்யப்படத் தேவையற்ற, குறைந்த எடை கொண்ட, குறைந்த செலவிலான, மளிகை சாமான்கள் /கடையில் இருந்து வாங்கும் இதர பொருள்களை எடுத்துச் செல்லக்கூடிய, திடமான பைகளை தயாரிக்கும் தனித்துவம் வாய்ந்த புதுமையான எண்ணங்கள் வரப்பெற்றன. இதுபோன்ற ஒவ்வொரு பைக்கும் விலை ரூபாய் 0.60 முதல் ரூபாய் 10 வரை இருக்கும். இது கைப்பை துறையில் உண்மையிலேயே ஒரு புரட்சியாகும்.

 

பரிசுகள் சான்றிதழ்கள் விருதுகள் விவரங்கள் பின் வருமாறு:

1. M/s அவேகா கிரீன் டெக்னாலஜீஸ் பூனே, மகாராஷ்டிரா முதல் பரிசு -- மூன்று லட்சம் ரூபாய் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிரிவு

 

2. M/s சக்தி நான் ஓவன் ஈரோடு, தமிழ்நாடு -  இரண்டாம் பரிசு இரண்டு இலட்சம் ரூபாய்  - ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிரிவு

 

3 திருட்டி பயோ சொல்யூஷன் மைசூரு, கர்நாடகா -- முதல் பரிசு மூன்று லட்சம் ரூபாய்  --- பல முறை பயன்படுத்தக்கூடிய பிரிவு

 

விருது வழங்கும் விழா 27 ஆகஸ்ட் 2020 அன்று புது தில்லி சென்னை, மும்பை, மைசூரு ஆகிய இடங்களில் ஒரே சமயத்தில் காணொளி மாநாடு மூலமாக நடைபெற்றது.

 

மத்தியத் துணித்துறை மகளிர் குழந்தைகள் மேம்பாடு ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராகப் பங்கேற்றார். விருது பெற்றவர்களின் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். “துணித்துறையில் பெரும் சவால் போட்டியில் பங்கேற்ற அனைவரையும் அவர் உற்சாகப்படுத்தினார். இத்துறையில் புதிதாக தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்கும் முன்னணி தொழில் அதிபர்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சக்தி நான் ஓவன் அமைப்பின் உரிமையாளர் திரு எஸ் விஜயகுமாருக்கு, தேசிய சணல் வாரியத்தின் துணை இயக்குர் திரு டி ஐயப்பன் பாராட்டு விருதும், காசோலையும் வழங்கினார்.

டி ஜி சி  - சக்தி நான் ஓவன் நிறுவனத்துக்கு காசோலை வழங்குதல்

டி ஜி சி   - மேடையில்

 



(Release ID: 1649136) Visitor Counter : 133